India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தம்பதிகளின் முகம் முதலில் தெரிந்தால்: மிகவும் Logical thinking கொண்டவராக இருப்பீர்கள். ஆழ்ந்த சிந்தனை உடையவராகவும், பிறரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பீர்கள். தோல்வி அடையவே கூடாது என நினைப்பீர்கள் *மரம் முதலில் தெரிந்தால்: உள்ளுணர்வு அடிப்படையில் செயல்படும் நபராக இருப்பீர்கள். உங்களை கவர்ச்சிகரமாக காட்டிக்கொள்ள விரும்புவீர்கள். பிறரை நம்புவதில் உங்களுக்கு தயக்கம் அதிகளவில் இருக்கும்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை திருவள்ளூர் மற்றும் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் வழக்கம் போல செயல்படவுள்ளன. தற்போதைய நிலவரப்படி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அம்மாவட்டத்தில் விடுமுறை என்று தகவல் வெளியான நிலையில் அதற்கு ஆட்சியர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேதியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் திருவள்ளூரில் இன்று விடுமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சச்சினின் மிக பெரிய சாதனையை முறியடிக்கும் விளிம்பில் இருக்கிறார். ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய அணிக்காக டெஸ்டில் இன்னும் 283 ரன்களை எடுத்தால் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையின் ஜெய்ஸ்வால் படைத்து விடுவார். சச்சின், 2010ல் 14 போட்டியில் 7 சதம் அடித்து 1,562 ரன்களை அடித்திருந்தார். ஜெய்ஸ்வால், 12 போட்டியில் 3 சதம் உட்பட 1,280 ரன்களை விளாசி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
மத்திய அரசின் நடவடிக்கையால் பருப்பு ரகங்களின் விலை உயரவில்லை என மினிஸ்டர் பி.எல்.வர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய அவர், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லரை விலை உயராமல் இருக்க மத்திய உணவுத்துறை அமைச்சகம் அவ்வப்போது மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்களுடன் சந்திப்பு நடத்துவதாகக் கூறினார். இதனால்தான் துவரம், உளுந்து, மைசூர் பருப்புகளின் விலை 3 மாதங்களாக உயரவில்லை என்றார்.
நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்த போது, அவருக்கு பின்னால் வந்த பெண் கமாண்டோவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலரும் இதை Fire Emoji போட்டு பகிர்ந்து வருகின்றனர். அந்த பெண் கமாண்டோ SPG படை பிரிவை சேர்ந்தவர் என யூகிக்கப்படுகிறது. கடந்த 2015 முதல் பெண்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது SPG-யில் 100 பெண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி மாநிலத்திலும் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘சூர்யா 44’ பட டைட்டிலுக்கு சிக்கல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘கல்ட்’ என்ற தலைப்பை படக்குழு யோசித்துள்ளதாம். ஆனால், அந்த தலைப்பை நடிகர் அதர்வா தான் இயக்கும் புதிய படத்திற்காக பதிவு செய்து வைத்துள்ளாராம். விஷயம் அறிந்த படக்குழு, அதர்வாவை தொடர்பு கொண்ட போது, அவர் தலைப்பை தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா – கனடா இடையிலான உறவு இன்னும் சிக்கலானதாகவே உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பார்லிமென்ட் குழுவிற்கு அளித்த தகவலில், இரு நாடுகளுக்கு இடையிலான நிலையான உறவுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. பிரிவினைவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
Sorry, no posts matched your criteria.