news

News January 12, 2026

காங்., துரோகத்தை ‘பராசக்தி’ காட்டியுள்ளது: அண்ணாமலை

image

‘பராசக்தி’ அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் பேட்டியளித்த அவர், காங்கிரஸை பற்றி தெரிந்துகொள்ள இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். காங்., கட்சி செய்த துரோகத்தை ‘பராசக்தி’ படம் காட்டியுள்ளதாகவும், இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News January 12, 2026

BREAKING: கூட்டணி முடிவு.. ராமதாஸ் புதிய அறிவிப்பு

image

NDA-வில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக <<18830863>>அமைச்சர் ராஜகண்ணப்பன்<<>> பேசிய விவகாரத்தை நேரடியாக மறுக்கவில்லை. அதேநேரம், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என சூசகமாக பதிலளித்துள்ளார். அன்புமணியை போல் ராமதாஸும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.

News January 12, 2026

சிறு தீங்கு நேர்ந்தாலும் ஸ்டாலினே பொறுப்பு: EPS

image

திமுக அரசால் கைதாகி <<18797386>>வீட்டுச் சிறையில் உள்ள <<>>இடைநிலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு CM முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என EPS கூறியுள்ளார். தொடர்ந்து 17-வது நாளாக அறவழியில் போராடி வரும் அவர்களை மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என்றும், கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துவதாகவும் EPS குறிப்பிட்டுள்ளார்.

News January 12, 2026

ALERT! உங்கள் ஆதார் Misuse ஆகுதா?

image

உங்கள் ஆதாரை வேறு யாராவது உங்களுக்கு தெரியாமல் யூஸ் பண்றாங்களா என்பதை எளிதாக கண்காணிக்கலாம். ➤myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள் ➤ஆதார் எண் & OTP-ஐ உள்ளிட்டு Login செய்யுங்கள் ➤அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்கள் ➤இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம் ➤முறைகேடு நடந்திருப்பதாக உணர்ந்தால் 1947 என்ற எண்ணில் புகாரளியுங்கள். SHARE.

News January 12, 2026

BIG BREAKING: இந்திய நாடே சோகத்தில் ஆழ்ந்தது

image

இஸ்ரோவின் இந்த ஆண்டின் முதல் ராக்கெட் லாஞ்ச் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. இன்று காலை 10.17 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப்பாய்ந்தது PSLV C-62 ராக்கெட். ‘EOS-N1 Anvesha’ செயற்கைகோள் ஏந்திச் சென்ற இது 3வது ஸ்டேஜில் தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கெனவே 2025 மே மாதத்தில் அனுப்பப்பட்ட PSLV C 61 ராக்கெட்டும் 3-வது ஸ்டேஜில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2026

இதயத்தை Bag-ல் சுமந்து வாழும் அதிசய பெண்!

image

2017 முதல் இதயம் இல்லாமல் ஒரு பெண் வாழ்கிறார் தெரியுமா? இங்கிலாந்தை சேர்ந்த செல்வா ஹுசைன்(39), Dilated Cardiomyopathy நோயால் பாதிக்கப்பட, அவரின் இதயம் செயலிழந்துள்ளது. இதனால், அவருக்கு செயற்கையாக Mechanical Heart Pump ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. 6 கிலோ எடை கொண்ட செயற்கை இதயத்தை Bag-ல் மாட்டியபடி குடும்பம், பிள்ளைகள் என அனைத்தையும் சாதாரணமாகவே இப்பெண் தொடர்கிறார். மருத்துவத்தின் அதிசயமே!

News January 12, 2026

விஜய் வருகையால் பரபரத்த டெல்லி!

image

கரூர் வழக்கு விசாரணைக்காக இன்னும் சற்று நேரத்தில் டெல்லி CBI அலுவலகத்தில் விஜய் ஆஜராக உள்ளதால் அங்கு காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதற்காக மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் CBI ஆபீஸை அலசி ஆராய்கின்றனர். அத்துடன், எந்த இடையூறும் இன்றி விஜய்யின் விமானம் தரையிறங்க VVIP-களுக்கு மட்டுமே வழங்கப்படும் T-4 எண்ட்ரியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

முடிஞ்சா காலை வெட்டுங்க: அண்ணாமலை சவால்

image

மும்பையில் <<18824079>>அண்ணாமலை<<>> பரப்புரை செய்தது பற்றி <<18833309>>ராஜ் தாக்கரே<<>> விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, தாக்கரே சகோதரர்கள் வேலையில்லாமல் சுற்றி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். கூட்டம் போட்டு திட்டும் அளவுக்கு தான் வளர்ந்துவிட்டதாக கூறிய அவர், யார் மிரட்டினாலும் மும்பை செல்வேன் என தெரிவித்துள்ளார். ‘மும்பைக்கு வருவேன், முடிந்தால் காலை வெட்டி பாருங்க’ என சவாலும் விடுத்துள்ளார்.

News January 12, 2026

பிரபல நடிகர் மரணம்.. தலைவர்கள் இரங்கல்!

image

பிரபல பாடகரும், நடிகருமான <<18826872>>பிரஷாந்த் தமாங்கின் <<>> (43) மரணம் அதிர்ச்சியடைய வைத்ததாக மேற்குவங்க CM மம்தா பதிவிட்டுள்ளார். BJP-ன் தேசிய செயலாளர் ராஜு பிஸ்டா, நாகாலாந்து சுற்றுலா & உயர்கல்வி துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா உள்ளிட்ட பலரும் பிரஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தா போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய பிரஷாந்த், பிறகு நடிகராகவும், பாடகராகவும் பெரும் பிரபலமடைந்தார். #RIP

News January 12, 2026

‘லோகா’ நாயகியின் வெற்றி ரகசியம்!

image

‘லோகா’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்நிலையில், பல மொழிகளில் இருந்து தனக்கு புதிய பட வாய்ப்புகள் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கதை கிடைத்தால் நடிக்க தயார்; மராத்தி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என மொழியை தான் ஒருபோதும் தடையாக பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!