India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ம.பி.யின் மௌகஞ்ச் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி, அரசு ஆம்புலன்சில் சிறுமியை (16) இருவர் கடத்தியுள்ளனர். அவரை ஓடும் வண்டியிலேயே பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் விட்டுவிட்டு தப்பித்துள்ளனர். இது குறித்து சிறுமி புகார் அளிக்கவே இச்சம்பவம் வெளியே வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி, அவரது நண்பர் ராஜேஷ் கேடவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில CM ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, அம்மாநில அரசு 18 – 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ₹1000 நிதியுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதல்வராக நேற்று பதவியேற்ற ஹேமந்த், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று திமுக எம்.பி கனிமொழி சோமு, தமிழகத்திற்கு புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, புதிய ஸ்மார்ட் சிட்டிக்கு வாய்ப்பில்லை என மத்திய இணையமைச்சர் தோஹன் சாகு பதிலளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 97% முடிந்ததாகவும், 2025 மார்ச் மாதம் அவை முழுமையடையும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி விடுதியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், B.Pharm படித்து வந்த முதுகுளத்தூரை சேர்ந்த காவிய தர்ஷினி, 4வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்படிப்பு காலத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்பு தரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த UGC திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் பட்டப்படிப்பு காலத்தை நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ள நிலையில், இந்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் இதுபோன்ற வாய்ப்பு வழங்க வரைவு திட்டம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கருத்து தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 430 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அது, மணிக்கு 9 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், அது நாளை இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுங்கச் சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ₹1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிதின் கட்கரி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலில், ஹைவேக்களில் PPP மூலம் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் டோல்கேட்கள் செயல்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் சுமார் 1000 டோல்கள் உள்ளன. Fastag வாயிலாக தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், GNSS சிஸ்டம் அமலில் இல்லை என்றார்.
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற ஹரியானாவைச் சேர்ந்த ராகுல் கரம்வீரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் தான் திடுக்கிட வைத்துள்ளது. தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, குஜராத் ரயில் நிலையங்களில் இதுவரை 5 பேரை அவர் கொலை செய்துள்ளார். இதில் 4 பேர் பெண்கள். அனைவரும் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளின் தனி கோச் தான் ராகுலின் டார்கெட். தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து தாக்குவதுதான் இவரது பாணி. ஓடும் ரயில்களிலும், ரயில்வே ஃபிளாட்பார்ம்களில் மட்டுமே தூங்குவதால் அவரை பிடிப்பது போலிசுக்கு சவாலாக இருந்துள்ளது. பல மாநில போலீசாருடன் தேடுதல் வேட்டையை நடத்தி, குஜராத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள 2,000 CCTV-களை ஆராய்ந்து ராகுலை போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.