India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புஷ்பா-2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் குறித்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை எழவே புஷ்பா-2 பின்னணி இசை பணியிலிருந்து நீக்கப்பட்டு, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்சின் அஜித்தின் குட் பேட் அக்லியில் இருந்தும் நீக்கப்பட்டு ஜிவி பிரகாஷ் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டுப்படி ஏறும் போது புகைப்படங்களோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என பக்தர்களுக்கு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, போலீசார் பதினெட்டாம் படி மீது ஏறி புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. அதே போல, மாளிகைப்புரம் கோயிலில் பின்பற்று வரும் நடைமுறையான மஞ்சள், துணிகளை கோயிலின் கூரைகளில் வீசுவதையும் தவிர்க்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2021 தேர்தலில் நத்தம் தொகுதியின் NTK வேட்பாளர் சிவசங்கரனை, சீமான் ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலாகிறது. இது தொடர்பாக சிவசங்கரன் தனது X பக்கத்தில், அந்த ஆடியோவை சீமானுக்கு அனுப்பி கேட்டபோது, ஆம் நான் தான் எனக் கூறினார். அண்ணன்(சீமான்) கோபத்தில் என்னை எதுவேண்டுமானாலும் பேசலாம், ஆனால் எனது குடும்பத்தாரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசும்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மக்களவை 12 மணி வரையிலும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து 5வது நாளாக முடங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே மின் ஒப்பந்தம் பெற அதானி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என்று, மத்திய அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என மத்திய அரசின் PIBFactCheck நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தெலங்கானாவில் 10 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்செரியல் மாவட்டத்தைச் சேர்ந்த 4ம் வகுப்பு சிறுமி நேற்று காலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தனர். எனினும், சிறுமி ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, <<14629107>>2 வாரம் முன்பு<<>> இதே பகுதியில் 12 வயது சிறுமி மாரடைப்பால் மரணமடைந்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் (34) அறிவித்துள்ளார். 2018இல் அயர்லாந்துக்கு எதிரான T20இல் அறிமுகமான இவர் இதுவரை தலா 3 டி20 & ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் பின் இந்திய அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கோலி தலைமையிலான (2008) U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் கவுல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்களின் பெயரில் மோசடி செய்பவர்களுக்கு உண்மையில் அப்பிரபலங்களை பெரிதாக தெரிந்திருக்காது. எழும்பூரை சேர்ந்த வீரராகவன் அளித்த புகாரில், அடையாளம் தெரியாத ஒருவர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என அணுகியுள்ளார். லாரன்ஸ் தொண்டு நிறுவனத்தில் பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்க ₹61,550 ரூபாய் கேட்க, இவரும் அளித்து ஏமாந்துள்ளார். புகாரின் பேரில், தினேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
நயன்தாரா எவ்வித காப்புரிமை மீறலிலும் ஈடுபடவில்லை என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் Behind the Scenes அல்ல எனவும், அது நயன் -விக்கி இருவரின் தனிப்பட்ட நினைவுகளின் வீடியோக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் தொடர்ந்த வழக்கில், இருவரும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், நயன் வக்கீல் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
பல்லடம் அருகே பண்ணை வீட்டில் தங்கியிருந்த செந்தில்குமார், அவரது பெற்றோர் அமலாத்தாள், தெய்வசிகாமணி ஆகியோர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில், வீடு புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த மூவரையும் கொன்றுவிட்டு நகை, பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி வீட்டை குறிவைத்து ‘தீரன்’ பட பாணியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.