India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது தவறை மறைக்க, திமுக அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கள்ளச்சாராய தயாரிப்பு, விற்பனையில் ஈடுபடும் திமுகவினரை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. கள்ளச்சாராய வழக்கில் கோர்ட் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு, தன்னை சுய பரிசோதனை செய்ய வேண்டும். 69 உயிர்கள் பலியான பின்னரும் திமுக திருத்திக் கொள்ளவில்லை என்று விமர்சித்தார்.
சீனாவில் தற்போது HMPV வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்று தமிழகத்திலும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதனால் இனி பல்வேறு கட்டுப்பாடுகள் அமலாகும் எனக் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த வைரஸ், குழந்தைகளை தான் குறி வைக்குமாம். அதன்படி, சமீபத்தில் பிறந்த ஜென் ஆல்ஃபா, 2025 முதல் பிறக்கும் ஜென் பீட்டா குழந்தைகளையே இந்த வைரஸ் அதிக அளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.
அண்மையில் தாக்கிய பெஞ்சல் புயலுக்கு 40 பேர் பலியாகி இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் RN ரவி வெளியேறியதையடுத்து, சபாநாயகர் அந்த உரையை வாசித்தார். அதில், புயலால் 14 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.6,675 கோடி விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 11 வயது மாணவர்கள் இருவர் திடீரென காலை 10 மணிக்கே ஸ்கூல் பேக் இல்லாமல் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். தங்களை ஒரு காரில் கடத்திய சிலர், மயக்க மருந்து கொடுத்ததாகவும், தவறாக கடத்தியதாக கூறி பின்னர் விட்டுவிட்டதாகவும் கூறினார்கள். போலீசுக்கு சந்தேகம் ஏற்பட, மாணவர்களிடம் துருவி துருவி விசாரித்ததில் உண்மை வெளிவந்தது. ஹோம் ஒர்க் பண்ணாததால், தண்டனையில் இருந்து தப்பிக்க இப்படி செய்தார்களாம்.
மாநிலத்தில் சீன வைரஸ் (HMPV) பரவியதாக வெளியான தகவல் குறித்து மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் HMPV வைரஸ் அடுத்தடுத்து மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே பீதி நிலவுகிறது. இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் HMPV வைரஸ் ஏற்கெனவே உள்ளதுதான் எனக் கூறப்பட்டுள்ளது.
Lockdown என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இந்தியாவில் 3 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இது குழந்தைகளை பெரியளவில் தாக்கும் என்பதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். ஒருவேளை கொரோனா போல், இந்த வைரஸும் பாதிப்பை ஏற்படுத்தினால், மீண்டும் லாக்டவுன் வரப்போவதாக நெட்டிசன்கள் lockdown என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
ADMK Ex அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை CBIக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, ரவீந்திரன் என்பவர் அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு நியாயம் மறுக்கப்படுவதாக ஐகோர்ட்டில் KTR முறையீடு செய்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்பட்ட கடும் சரிவால் ரூ.12 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதல் பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 388 புள்ளிகள் குறைந்தது. இந்த வீழ்ச்சியால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதகஜராஜா பட ப்ரோமோஷன் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் மேடையில் பேசியது, அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அவருக்கு ஹை-டிகிரியில் காய்ச்சல் இருந்ததாக படக்குழு விளக்கமளித்தது. தற்போது அவருக்கு வைரல் பீவர் என அப்பல்லோ ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சிகிச்சையும் முழுமையான பெட் ரெஸ்ட்டும் எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Get Well Soon, Vishal!
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2024 ஒலிம்பிக் இறுதி போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். அவர் பாக். வீரரிடம் தோற்றது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார். 6 ஆண்டுகளாக இடுப்பு காயத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அந்த முடிவு எடுக்க முடியவில்லை. இன்னும் கூடுதல் தூரம் ஈட்டியை எறிந்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது என ஆதங்கப்பட்டுள்ளார். It’s OK பாஸ்!
Sorry, no posts matched your criteria.