News February 16, 2025
எலும்புகள் பலமாக டிப்ஸ் இதோ!

மனித உடலில் உள்ள எலும்புகள் பலமாக…
பச்சை இலை காய்கறிகள், தயிர், மீன், சிட்ரஸ் பழங்கள், டோஃபு, பாதாம், உலர்ந்த பிளம்ஸ், பால் பொருள்கள், வெண்ணெய், காளான், தேங்காய், கிரீன் டீ, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், முட்டை. இவற்றை நாள்தோறும் நாம் சாப்பிடும் உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் வலுவாகும், சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்,
Similar News
News July 5, 2025
உரிமைத்தொகை விண்ணப்பம்.. அரசு புதிய அறிவிப்பு

ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முகாம்களுக்கு செல்லும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கு செப்., முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
News July 5, 2025
ஆண்களின் ‘அந்த 7 பழக்கங்கள்’

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை: 1)புகைப்பழக்கம் 2)அதிகமாக மது அருந்துவது 3)அதிக வெப்பத்தில் இருப்பது 4)நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பது 5)அளவுக்கதிகமான உடலுறவு (அ) உடலுறவை முற்றிலும் தவிர்ப்பது 6)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் 7)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.
News July 5, 2025
பூரிக் கட்டையால் அடித்தே கணவனை கொன்ற மனைவி

கணவனை பூரிக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்தது பெங்களூருவை அதிரவைத்துள்ளது. கணவன் பாஸ்கர் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவி ஷ்ருதி ஆத்திரமடைந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஷ்ருதி, கணவனை பூரிக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.