India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் மகாகும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ளார். வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவர், இந்திய கலாச்சார உடையில் கோவிலில் பிரார்த்தனை செய்தார். இருப்பினும், கோவில் வழக்கப்படி வெளிநாட்டினர் லிங்கத்தை தொட அனுமதி இல்லை என்பதால் கருவறைக்கு வெளியே நின்று வழிபட்டார். அவர் கல்பவாசம் என்ற விரதத்தையும் மேற்கொள்ள இருக்கிறார் எனப்படுகிறது.
12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பழைய காமெடி Vintage சந்தானத்தை மீண்டும் கொடுத்திருப்பதாகவும், மனோபாலாவும் பயங்கரமாக சிரிக்கவைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். படம் பழைய படம் என்பதை போலவே இல்லை என்றும், ரொம்ப நாள் கழித்து சிரித்து சிரித்து பார்த்த படம் என்கிறார்கள். Stay tuned with Way2News for full review…
சென்னையில் சிக்கன் விலை இன்று கிலோ ₹240 முதல் ₹260 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மொத்த கோழி பண்ணையில் கறிக்கோழியின் (உயிருடன்) விலை கிலோ ₹101ஆக உள்ளது. முட்டைக்கோழி (உயிருடன்) கிலோ ₹83க்கு விற்கப்படுகிறது. மட்டன் கிலோ ₹800-850 வரையும் விற்பனையாகிறது. முட்டையின் விலை மொத்த சந்தையில் ₹4.80க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் முட்டை ஒன்று ₹6 – ₹7க்கு விற்பனை செய்யப்படுகிறது.
*டேட்டா என்ட்ரி: Type Writing தெரிந்தால் போதும், கணினி, இணையதள வசதி தேவை *ப்ளாகிங்: கலைநயத்துடன் எழுதும் திறன் இருந்தால், காபி ரைட்டிங், கன்டன்ட் ரைட்டிங், கோஸ்ட் ரைட்டிங் என வாய்ப்புகள் உள்ளன *யூடியூப்: இது தான் ட்ரெண்டிங். சமையல், வீட்டு உபயோக டிப்ஸ் என கொஞ்சம் உழைப்பை போட்டால் போதும் *மொழிபெயர்ப்பு: கூகுள், பேஸ்புக் என பல நிறுவனங்கள் Translator ஆட்சேர்ப்பு உள்ளது. 2, 3 மொழி புலமை வேண்டும்.
மதுரை – பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.15ல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. வழக்கமாக சிறந்த காளைகளுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டு வேளாண் பணிக்கு பயன்படும் வகையில் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் டிராக்டர் வழங்க வலியுறுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IND – ENG இடையேயான 2வது T20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஜன.,25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்நிலையில், டிக்கெட் விலை ₹1,000 – ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகள் ZOMATO DISTRICT செயலி வாயிலாக விற்பனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சீமானை கைது செய்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக, மாநிலம் முழுவதும் அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. சீமானின் பேச்சு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 20ஆம் தேதி அறிக்கை சமர்பிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
போகியையொட்டி இன்றும், நாளையும் (ஜன.,13, 14) விமானங்களின் வருகை, புறப்பாடு நேரங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் (ஏர் ஏசியா), துபாயிலிருந்து (எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்) வரும் விமானங்கள் தாமதமாக வந்துவிட்டு, இங்கிருந்து தாமதமாகவே புறப்படும். இது குறித்து பயணியருக்கு எஸ்.ஓ.பி., முறைப்படி உரிய தகவல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் BJP Ex MLA ஹர்வன்ஷ் சிங் வீட்டில் IT அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 முதலைகள் உள்ளிட்ட ஊர்வனவற்றை வளர்ப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹200 கோடிக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இப்போது முதலை விவகாரத்தை வனத்துறையினர் கையில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாம். கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதை இது தானோ?
தினமும் சிறிது நேரம் வெறுங்காலில் நடப்பதால் கால்கள் வலுப்பெறும். இரத்த ஓட்டம் மேம்படும். சமதளமற்ற பரப்புகளில் நடக்கும்போது கால்களில் ஏற்படும் அழுத்தம் உடலின் செயல்பாட்டை மேம்படுத்தும். தொடை தசைகள் இறுகும். முழங்கால்கள், இடுப்பு, உடலின் மையப்பகுதியில் நல்ல இயக்கம் இருக்கும். நடக்கும் வேகம் அதிகரிக்கும். புல், மணல் அல்லது மண் போன்ற இயற்கை பரப்புகளுடன் ஏற்படும் இணைப்பு மன அழுத்தத்தை குறைக்கும்.
Sorry, no posts matched your criteria.