News January 12, 2025
தினமும் வெறுங்காலுடன் நடப்பதால் என்ன பயன்?

தினமும் சிறிது நேரம் வெறுங்காலில் நடப்பதால் கால்கள் வலுப்பெறும். இரத்த ஓட்டம் மேம்படும். சமதளமற்ற பரப்புகளில் நடக்கும்போது கால்களில் ஏற்படும் அழுத்தம் உடலின் செயல்பாட்டை மேம்படுத்தும். தொடை தசைகள் இறுகும். முழங்கால்கள், இடுப்பு, உடலின் மையப்பகுதியில் நல்ல இயக்கம் இருக்கும். நடக்கும் வேகம் அதிகரிக்கும். புல், மணல் அல்லது மண் போன்ற இயற்கை பரப்புகளுடன் ஏற்படும் இணைப்பு மன அழுத்தத்தை குறைக்கும்.
Similar News
News November 15, 2025
கேப்டனாக ருதுராஜ் தொடர்வார்: CSK

CSK கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என அணி நிர்வாகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. டிரேட் மூலம் ராஜஸ்தானிடம் இருந்து சஞ்சு சாம்சனை CSK வாங்கியதால், அவர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக CSK அணி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவரது தலைமையில் கடந்த 2 சீசன்களாக CSK பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இந்த முடிவு சரியானதா?
News November 15, 2025
இந்திய மார்க்கெட்டில் இந்த போன் தான் ராஜா!

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் ஐபோன் தான் ஆதிக்கம் செலுத்துகிறது என நீங்கள் நினைத்தால், அது தவறு. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் இந்தியாவில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் போன்கள் தான் மார்க்கெட்டின் ராஜாவாக உள்ளன. அப்படி இந்தியர்களை அதிகளவில் கவர்ந்த டாப் 8 இடத்தில் உள்ள போன்களின் லிஸ்டை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க என்ன போன் யூஸ் பண்றீங்க?
News November 15, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… அறிவித்தார்

2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைவதாக ஃபார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள், EPS-ஐ நேரில் சந்தித்தனர். அப்போது, EPS-க்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.


