News January 12, 2025
எப்படி இருக்கிறது மதகஜராஜா? Public Talk

12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பழைய காமெடி Vintage சந்தானத்தை மீண்டும் கொடுத்திருப்பதாகவும், மனோபாலாவும் பயங்கரமாக சிரிக்கவைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். படம் பழைய படம் என்பதை போலவே இல்லை என்றும், ரொம்ப நாள் கழித்து சிரித்து சிரித்து பார்த்த படம் என்கிறார்கள். Stay tuned with Way2News for full review…
Similar News
News November 8, 2025
EPS முகத்திரை கிழிந்தது: ஆர்.எஸ்.பாரதி

பெண்கள் பாதுகாப்பு குறித்து EPS-ன் அற்பத்தனமான அரசியல் அம்பலமானது என்று ஆர்.எஸ்.பாரதி கட்டமாக விமர்சித்துள்ளார். கோவை விவகாரத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணே வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால், எந்த வகையிலாவது திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நாள்தோறும் விஷமப் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் EPS-ன் முகத்திரை கிழிந்துள்ளது எனவும் சாடியுள்ளார்.
News November 8, 2025
FLASH: 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக TN-ல் நவ. 8-ம் தேதி தொடங்கி 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என ஏற்கெனவே IMD அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வெளியே செல்வோர் மறக்காமல் குடையோடு செல்லுங்கள்.
News November 8, 2025
ஒரே கட்சியாக மாறுகிறது.. அரசியல் திருப்பம்

வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக பிராந்திய அரசியல் கட்சிகள் ஒன்றாக இணைய உள்ளன. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா ஆகிய 7 மாநிலங்களின் உரிமைக்காக முக்கிய தலைவர்களான கான்ராட் சங்கா, பிரத்யோத் மாணிக்யா, டேனியல் லாங்தசா, கிகோன் உள்ளிட்டோர் டெல்லியில் இதற்காக ஆலோசனை நடத்தினர். தென்னிந்தியாவிலும் இதுபோன்ற பேச்சு நீண்ட காலமாக இருந்து வருகிறது.


