news

News February 11, 2026

Cab-ல் தனியாக செல்லும் பெண்களே.. NOTE THIS

image

பெண்களே, Cab-ல் பயணிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வந்தால் பதற்றமடைய வேண்டாம். 112 என்ற நம்பருக்கு டயல் செய்தால் போதும். 10 நிமிடங்களில் லொகேஷனை டிராக் செய்து நீங்கள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் வந்துவிடும். ‘112 India APP’ செயலியையும் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எப்போது பிரச்னை வந்தாலும், இது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இத SHARE பண்ணுங்க.

News February 11, 2026

10 நாள்களில் வெள்ளி விலை ₹50,000 குறைந்தது

image

<<19107790>>தங்கம் விலை<<>> ஏற்ற இறக்கத்தில் உள்ள போதிலும், கடந்த 2 நாள்களாக வெள்ளி விலை மாற்றமின்றி(கிராம் ₹300) விற்பனையாகிறது. கடந்த 31-ம் தேதி கிலோ ₹3,50,000-க்கு விற்பனையான பார் வெள்ளி 10 நாள்களில் ₹50,000 சரிந்து ₹3,00,000 ஆனது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலை தொடர்ந்தால் வெள்ளி விலை மேலும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, முதலீடு நோக்கில் வாங்குவோர் சற்று சிந்தித்து செயல்படுங்கள்.

News February 11, 2026

இந்தியாவில் ஊழல் குறைந்தது.. ஆய்வு சொல்வது என்ன?

image

இந்தியாவில் ஊழல் குறைந்துள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் கூறியுள்ளது. 2024-ல் ஊழல் குறியீட்டில் 182 நாடுகளில் 96-வது இடத்தில் இருந்த இந்தியா, 1 பாயிண்ட் குறைந்து 2025-ல் 91-ல் உள்ளது. டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர் ஊழல் குறைந்த நாடுகளாக உள்ளன. சூடான், சோமாலியா ஊழல் மிகுந்த நாடுகளாக உள்ளன. மேலும், டிரம்ப் ஆட்சிக்கு பின் USA-ல் ஊழல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து?

News February 11, 2026

விஜய்யின் EX மேலாளருக்கு திமுகவில் முக்கிய பதவி!

image

விஜய் உடன் நீண்ட காலமாக பயணித்து அண்மையில் திமுகவில் இணைந்த அவரது EX மேலாளர் PT செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், OPS ஆதரவாளராக இருந்து பின், திமுகவில் ஐக்கியமான அதிமுக EX MLA சுப்புரத்தினத்திற்கு செய்தித் தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுக் கட்சியில் இருந்து வருவோருக்கு உடனடி பதவியா எனவும் திமுகவில் புகைச்சல் எழுந்துள்ளதாம்.

News February 11, 2026

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

மாசி மாத பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் 17-ம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் காலையில் நெய்யபிஷேகமும், இரவில் படி பூஜைகளும் நடைபெறவுள்ளன. ஐயப்ப பக்தர்கள் பெரும் திரளாக வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

News February 11, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு!

image

தங்கம் விலை இன்று(பிப்.11) சற்று உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹14,600-க்கும், சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹1,16,800-க்கும் விற்பனையாகிறது. <<19106485>>சர்வதேச சந்தையில்<<>> நிலவும் மந்த நிலை காரணமாக <<19098346>>நேற்று சவரனுக்கு ₹560<<>> குறைந்திருந்த தங்கம், இன்று சற்று உயர்ந்துள்ளது.

News February 11, 2026

திமுகவை கூட்டணி கட்சிகளே தோற்கடிக்கும்: அன்புமணி

image

பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு காரணமான திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் அன்புமணி பேசியுள்ளார். 5 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த ஸ்டாலின், 45 நாள்களில் 26 புதிய ஏமாற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக சாடினார். மேலும், திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளே ஸ்டாலினை தோற்கடிக்கும் சூழல்தான் தற்போது உள்ளதாக தெரிவித்தார். இது பற்றி உங்கள் கருத்து?

News February 11, 2026

ரெட் கலரிங் ஃபுட் வாங்குறீங்களா.. உஷார்!

image

‘RED DYE #3’ என்ற மலிவு விலை ஃபுட் கலரிங்கை உணவு நிறுவனங்கள் கலரிங்கிற்காக யூஸ் செய்கிறார்கள். ஆனால், இதனை எலிகளுக்கு அளித்து டெஸ்ட் செய்ததில், கேன்சர் ஏற்படும் வாய்ப்பிருப்பதால், இந்த கலரிங்கை USA, ஐரோப்பா நாடுகள் தடை செய்து விட்டார்களாம். இவை குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சாக்லேட், ஜூஸ், கேக் என பலவற்றிலும் இது சேர்க்கப்படுகிறது. உஷாரா இருங்க!

News February 11, 2026

சற்றுமுன்: பள்ளியில் நடந்த கொடூரம்.. 10 பேர் பலி

image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

News February 11, 2026

கைதியிடம் அடிவாங்கிய மு.க.ஸ்டாலின்.. SHOCKING

image

மிசாவில் கைதானபோது சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராணயனுடன் கலந்துரையாடிய அவர், தொழு நோயாளிகள் அறையில் தன்னை அடைத்ததாகவும், சிறுநீர் கழிக்கும் பானை, தண்ணீர் பானை இரண்டும் பக்கத்தில் இருக்கும் அளவுக்கு அசுத்தம் நிறைந்த இடமாக அது இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுள் கைதிகளை வைத்து தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!