India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும். அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கிறது அண்மை ஆய்வு. மார்பக புற்றுநோய் பாதித்த 1,998 ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 19.2% பேருக்கு குழந்தைகள் இல்லாததும், 5.6% பேருக்கு மலட்டுத்தன்மை இருந்ததும் உறுதியானது. குழந்தையில்லாத நிலைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பக்காவான ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர், சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். IPL-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் என்ற பட்டியலில் தோனியை (7) பின்னுக்குத் தள்ளி, வார்னேவின் சாதனையை அவர் (8) சமன் செய்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்காக 6 போட்டிகள், இப்போது பஞ்சாப்புக்காக 2 போட்டிகளில் அவர் வென்றுள்ளார். பட்டியலில் கம்பீர்(10) முதலிடத்தில் உள்ளார்.
2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444
அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக எதிர்த்து களமாடி வருகிறார். இந்நிலையில், ‘நேற்று முளைத்த ஒரு காளான், கட்சித் தொடங்கி 17 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள்’ என திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டன் தூங்கினால் கும்ப கர்ணன், எழுந்தால் இந்திரஜித் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என ஒருபோதும் காங். சொல்லாது என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 272 ஏக்கர் வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, மீனவர்கள் தங்களுக்கு உரிமை வேண்டும் என சொல்வதால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.
TNPSC தேர்வு எழுதுவோர், இனி அதற்கான கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஆன்லைன் வங்கி சேவை அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அதன் மேம்பட்ட வடிவமாக, தற்போது UPI வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இனி, GPay, PhonePe மூலம் TNPSC கட்டணம் செலுத்தலாம்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் <<15968727>>4 என்கவுண்ட்டர் சம்பவங்கள் <<>>நடைபெற்றுள்ளன. தற்காப்புக்காக அல்லாமல், வேண்டுமென்றே என்கவுண்ட்டர் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்ற கருத்து ஒருபுறமும், சட்டத்தை மீறுவோரை இப்படிதான் செய்ய வேண்டும் எனும் வரவேற்பு கருத்து ஒருபுறமும் நிலவுகிறது. என்கவுண்ட்டர் என்பது போலீசார் சட்டத்தை கையிலெடுக்கும் உரிமை மீறல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். உங்கள் கருத்து என்ன?
முஸ்லிம்கள் தானமாக கொடுத்த வக்ஃபு சொத்துகளை கண்காணிப்பதே வக்ஃபு வாரியம். இந்த வாரியத்தின் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தவும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் திருத்தங்கள் வேண்டும் எனக் கூறி, இன்று ‘வக்ஃபு (திருத்தம்) மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால், இம்மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கின்றன. இந்த மசோதா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
உள்ளூர் போட்டிகளில், அடுத்த சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட, மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC சான்றிதழ் கேட்டிருக்கிறார் ஜெய்ஸ்வால். தனது தனிப்பட்ட விஷயம் காரணமாக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. U-19 வீரராக இருந்த காலத்தில் இருந்து ஜெய்ஸ்வால், மும்பை அணியில் விளையாடி வருகிறார்.
Sorry, no posts matched your criteria.