news

News April 2, 2025

Health Tips: விந்தணுவை அதிகரிக்க என்ன செய்யலாம்?

image

நவீன உலகில் ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் விந்தணுக்கள் குறைபாடும் ஒன்று. அதனை தவிர்க்க, புகை, போதைப் பழக்கம், வெப்பச் சூழலில் வேலை பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். சிறுதானிய, புரத உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். விதைப்பை குளிர்ச்சியை உணரும் உறுப்பு என்பதால், இறுக்கமான உள்ளாடை, ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகள் அணியக் கூடாது. SHARE IT.

News April 2, 2025

அதிமுக கூட்டணி வேண்டாம் வேண்டாம்..

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டணி அமைய வேண்டுமானால், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று அதிமுக நிபந்தனை விதிப்பதாகப் பேசப்படுகிறது. இதனையடுத்து, அண்ணாமலை ஆதரவாளர்கள், அதிமுக கூட்டணி வேண்டாம் என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.

News April 2, 2025

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று ஏற்றம்

image

டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எச்சரிக்கை எதிரொலியாக கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டன. இந்நிலையில், இன்று வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயர்வடைந்து 76,617ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 23,332ஆக நிறைவடைந்தது. 2,755 பங்குகள் உயர்வுடனும், 1,048 பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன.

News April 2, 2025

ALERT: ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து

image

மார்பக புற்றுநோய் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் தாக்கும். அதுவும், குழந்தையில்லாத ஆண்களை அதிகம் தாக்கும் என்கிறது அண்மை ஆய்வு. மார்பக புற்றுநோய் பாதித்த 1,998 ஆண்களிடம் நடத்திய ஆய்வில் 19.2% பேருக்கு குழந்தைகள் இல்லாததும், 5.6% பேருக்கு மலட்டுத்தன்மை இருந்ததும் உறுதியானது. குழந்தையில்லாத நிலைக்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

News April 2, 2025

தோனியை பின்னுக்குத் தள்ளிய ஸ்ரேயஸ்… எதில் தெரியுமா?

image

பக்காவான ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர், சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். IPL-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் என்ற பட்டியலில் தோனியை (7) பின்னுக்குத் தள்ளி, வார்னேவின் சாதனையை அவர் (8) சமன் செய்துள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்காக 6 போட்டிகள், இப்போது பஞ்சாப்புக்காக 2 போட்டிகளில் அவர் வென்றுள்ளார். பட்டியலில் கம்பீர்(10) முதலிடத்தில் உள்ளார்.

News April 2, 2025

தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகம்

image

2022ஆம் ஆண்டு நாட்டில் மொத்தம், 1,70,924 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும், 19,834 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாட்டிலேயே தற்கொலையில் மகாராஷ்டிராவுக்கு (22,746) அடுத்த இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். உதவிக்கு அழைக்கவும்: +91 044 2656 4444

News April 2, 2025

நேற்று முளைத்த காளான்… விஜய்யை சீண்டிய R.S. பாரதி!

image

அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக எதிர்த்து களமாடி வருகிறார். இந்நிலையில், ‘நேற்று முளைத்த ஒரு காளான், கட்சித் தொடங்கி 17 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள்’ என திமுக அமைப்புச் செயலாளர் R.S. பாரதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டன் தூங்கினால் கும்ப கர்ணன், எழுந்தால் இந்திரஜித் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News April 2, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News April 2, 2025

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்: செல்வப் பெருந்தகை

image

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என ஒருபோதும் காங். சொல்லாது என செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். 272 ஏக்கர் வானம் பார்த்த பூமியை கொடுத்துவிட்டு, பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்தவர் இந்திரா காந்தி என அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது, மீனவர்கள் தங்களுக்கு உரிமை வேண்டும் என சொல்வதால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதை ஆதரிக்கிறோம் என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

News April 2, 2025

இனி UPI மூலம் செலுத்தலாம்

image

TNPSC தேர்வு எழுதுவோர், இனி அதற்கான கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஆன்லைன் வங்கி சேவை அல்லது கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அதன் மேம்பட்ட வடிவமாக, தற்போது UPI வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இனி, GPay, PhonePe மூலம் TNPSC கட்டணம் செலுத்தலாம்.

error: Content is protected !!