news

News April 4, 2025

10 மாவட்டங்களில் இரவில் மழைக்கு வாய்ப்பு

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லையில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. குமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News April 4, 2025

நடிகை ஷிவானிக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி?

image

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி, சில படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான அவரின் புகைப்படத்தில் முகம் வெகுவாக மாறியிருந்தது. இதனால் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதை மறுத்த ஷிவானி, ஒரு வருடமாக ஹெல்தி டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதாகவும், அதனால் முகம் மாறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவர் சொல்வது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.

News April 3, 2025

வஃக்பு: மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் என்ன?

image

வஃக்பு வாரிய திருத்த மசோதா, மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மசோதாவை நிறைவேற்ற 125 MP-க்கள் பலம் பாஜக கூட்டணிக்கு உள்ளது. இதில் பாஜக 98, ஜேடியூ 4, என்சிபி 3, டிடிபி 2, நியமன MP-க்கள் 6 பேர் அடங்குவர். எதிர்க்கட்சிகளுக்கு 88 MP-க்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 27, திரிணாமுல் 13 MP-க்கள் அடங்குவர். பிஜேடியின் 7 MP-க்கள் ஆதரவு கிடைத்தால் பலம் கூடும்.

News April 3, 2025

ரூ.13,800 கோடி கணக்கில் வராத சொத்து வெளிவந்தது

image

பனாமா பேப்பர்ஸ் கசிவு எதிரொலியாக இந்தியாவில் கணக்கில் வராத ரூ.13,800 கோடி மதிப்பு சொத்துகள் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016இல் புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கணக்கில் காட்டாது மறைத்த சொத்துகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் இதன் எதிரொலியாக பல ஆயிரம் கோடி சொத்துகள் வெளிவந்து ரூ.145 கோடி வரி வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

News April 3, 2025

ஜேடியு கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகல்

image

வஃக்பு சட்ட (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதீஷ்குமாரின் ஜேடியுவில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். மக்களவையில் நேற்று அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஜேடியு கட்சி ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேடியு சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அஸ்ரப் அன்சாரி, மூத்த தலைவர் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் விலகியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News April 3, 2025

18 வயதுக்குள் அந்த அனுபவம்… ஆண்களா? பெண்களா?

image

இந்தியாவில் திருமணத்துக்கு முன்பே உறவில் ஈடுபட்டதாக 7.4% ஆண்களும் 1.5% பெண்களும் தெரிவித்துள்ளதாக `தேசிய குடும்பநல கணக்கெடுப்பு 5’ தெரிவிக்கிறது. 15 வயதுக்குள் முதல் பாலுறவு அனுபவம் பெற்றதாக 10.3% பெண்களும், 0.8% ஆண்களும் தெரிவித்துள்ளனர். 18 வயதுக்குள் 6% பெண்களும் 4.3% ஆண்களும் பாலுறவு அனுபவம் பெற்றுள்ளனர். இதில் பெண்களின் சதவீதம் அதிகம் இருக்க முக்கிய காரணங்கள் எவை? கமென்ட் செய்யுங்க.

News April 3, 2025

வாழை நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

image

இந்த நடிகைகளுக்கு எப்படி தான் மனசு வருதோ? எதுவுமே நடக்காத மாதிரி எப்படி தான் இருக்காங்களோ என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருவது மலையாள நடிகை நிகிலாவைத் தான். வாழை திரைப்படம் மூலம் நல்ல பெயர் எடுத்த இந்த நடிகை பாலியல் புகாருக்குள்ளான மலையாள நடிகர் திலீப்புடன் கத்தாரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது போதாதென்று அவருடன் ஒரே மேடையில் நடனமாடியது தான் நெட்டிசன்களை கொதிப்படைய வைத்துள்ளது.

News April 3, 2025

என்ன பண்ண போறீங்க.. மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

image

USAவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய நிலத்தை திரும்ப தரும்படி மோடியும், குடியரசுத் தலைவரும் சீனாவுக்கு கடிதம் எழுதியது குறித்து சீன தூதர் தெரிவித்ததை வைத்தே விஷயம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக விமர்சித்தார். இந்திய நிலத்தை திரும்ப பெற அரசு என்ன செய்ய போகிறது எனவும் வினவினார்.

News April 3, 2025

பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

image

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களுடன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்ததை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!