India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ஏழை மக்களின் ஆசிர்வாதம் தனக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்தரங்கில் பேசிய அவர், “என்னை முகலாய மன்னர் அவுரங்கசீப்புடன் எதிர்க்கட்சியினர் ஒப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இது 104வது அவதூறாகும். எதிர்க்கட்சியினர் விமர்சித்தாலும், ஏழைகளின் ஆசிர்வாதம் எனக்கு உள்ளது. எனது அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாட்டு மக்கள் முடிவெடுத்துவிட்டனர்” என்றார்.
வேட்புமனுத் தாக்கல் குறித்து வேட்பாளர்களுடன் திமுக தலைமை நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில், மூத்த வழக்கறிஞர் இளங்கோ வேட்புமனுத் தாக்கல் குறித்த ஆலோசனைகளை வழங்குவார் என்று தெரிகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் புதுமுகங்கள் 11 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், 16 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று இபிஎஸ் வெளியிட்டார். இதில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், மதுரை சரவணன் உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாக உள்ள 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில், மீதமுள்ள 17 வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களாக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் இன்றிரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
குரூப்-2 பதவியில் 29 காலி பணியிடங்களை நிரப்ப 3ம் கட்ட நேர்முக தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் தேர்ச்சியடைந்து தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணி ஒதுக்கீடு முடிந்து வருகிறது. இதில் காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு இன்று 3ம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் விவரங்களை பதிவு செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
கிரிக்கெட் விளையாடுவதில் உள்ள அபார திறமை காரணமாக தோனி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார் என்று வர்ணனையாளர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். தோனி குறித்து பேசிய அவர், “தோனி 42 வயதில் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அதிசயம். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடாத பட்சத்தில் ஆடுகளத்தில் தடுமாற்றம் ஏற்படும். பாண்டிங், சச்சின் போன்றோர் கூட பேட் பிடிக்க தவித்தனர். தோனி விதிவிலக்காக உள்ளார்” என்றார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி, ரஷ்யா & உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாட்டு அதிபர்களும் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில், அந்நாடுகளின் அதிபர்களுடன் மோடி போனில் பேசியபோது, அவர்களுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட இந்தியா சிறப்பான பங்கை வகிக்கும் என்று அவர்கள் கருதுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக-விற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த தொகுதி என்பது உறுதி செய்யப்படவில்லை. தற்போது குக்கர் சின்னம் கிடைத்துள்ளதால், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
எல்லை கடந்து மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த மேலும் 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 25 பேர் மற்றும் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்த 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
Sorry, no posts matched your criteria.