News April 7, 2024
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நடைபயிற்சி

ஒரே இடத்தில் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உடலில் வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் காலங்களில் கருப்பு உடை அணிவதால் தவறில்லை. நடைபயிற்சியை விட சிறந்த பயிற்சி உடலுக்கு வேறு எதுவும் இல்லை.
Similar News
News February 19, 2026
பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (1/2)

ராஜ்யசபாவில் திமுகவின் 4 MP சீட்களுக்கு தேர்தல் வருகிறது. ஏற்கெனவே திருச்சி சிவாவுக்கு ஒரு சீட் நிச்சயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மீதமிருக்கும் 3-ல் காங்., & விசிக ஒன்றை கேட்கிறதாம். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்படும் தேமுதிகவும், ராமதாஸும் தலா 1 சீட் கேட்கிறார்களாம். இதனால் திமுக திக்குமுக்காடி போயிருப்பதாக பேசப்படுகிறது. அதிமுக செய்திக்கு <<19180714>>CLICK<<>>.
News February 19, 2026
பெரும் சிக்கலில் திமுக, அதிமுக.. இதான் பிரச்னை! (2/2)

அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அந்த இரண்டே சீட்டுக்கு அக்கட்சியில் கடும் போட்டி நடக்கிறதாம். ஏற்கெனவே 1 MP சீட் அன்புமணிக்கு உறுதியாகிவிட்டது. மீதமிருக்கும் ஒரே சீட்டுக்கு அத்தனை நெருக்கடி. ஒரு பக்கம் GK வாசன், இன்னொரு பக்கம் தம்பிதுரை நிற்கிறார்களாம். அத்துடன் அதிமுகவுக்கும் 1 MP சீட் வேண்டும் என நிர்வாகிகள் கேட்பதால் இடியாப்ப சிக்கலில் EPS இருப்பதாக பேசப்படுகிறது.
News February 19, 2026
என்னது பல் தேய்ச்சிட்டு வாய் கொப்பளிக்க கூடாதா?

பல் துலக்கிய பின் வாயை கொப்பளித்து, துப்புவது வழக்கம். ஆனால், இதை நீங்கள் தவறாக செய்கிறீர்கள் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஏனென்றால், பற்பசையில் உள்ள ஃப்ளோரைடு வேலை செய்ய சிறிது நேரம் தேவைப்படுகிறதாம். ஆனால், நாம் அதற்கு முன்பாகவே, பேஸ்ட் நுரையை துப்பிவிடுகிறோம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். பல் துலக்கிய 20-30 நிமிடங்கள் வரை காத்திருக்குமாறும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.


