News April 7, 2024
கர்ப்பிணிகளின் கவனத்திற்கு…

கர்ப்பிணிகள் காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும், அடிக்கடி மயக்கமும் வராது. வயிற்றில் குழந்தை வளர வளர அதிகமாக சாப்பிட முடியாது, சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்களை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று, அதுகுறித்து பயப்பட தேவையில்லை.
Similar News
News February 16, 2026
CINEMA 360°: ரீ-ரிலீசாகும் ‘சூது கவ்வும்’

*தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்.16-ல் ரிலீசாகிறது *கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்.19-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ வெளியீடு பிப்.27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது *விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ பிப்.20-ல் ரீ-ரிலீசாகும் என அறிவிக்கபட்டுள்ளது *ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பர்ஸ்ட் சிங்கிள் பிப்.17-ல் வெளியாகிறது.
News February 16, 2026
வாய் துர்நாற்ற பிரச்னையா? அப்போ இதை யூஸ் பண்ணுங்க..

சங்கடத்தை தரும் வாய் துர்நாற்றத்தை குறைந்த இந்த பொருள்கள் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *இஞ்சி: இஞ்சியில் இருக்கும் ஜிஞ்செரோல் உமிழ்நீர், குடல் இயக்கத்தை அதிகரிக்குமாம். *புதினா இலைகள்: இதில் உள்ள மெந்தால், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்குமாம். *சோம்பு, கிராம்பு: இதுவும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.
News February 16, 2026
நம்பிக்கையில்லா தீர்மானம்… மார்ச் 9-ம் தேதி ஓட்டெடுப்பு

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் இதற்கான ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,118 MP-க்கள் கையெழுத்திட்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.


