India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர். ஒருபுறம் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் இன்று 400 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஜவுளி, காகித தொழிலில் மிகப்பெரிய நிறுவனமாக டிரிடென்ட் திகழ்கிறது. அதன் தலைவரான ரஜிந்தர், 9ம் வகுப்பு படிப்பை பாதியில் கைவிட்டவர். அவர் தனது 14 வயதில் ரூ.30க்கு தினக் கூலியாக வேலை பார்த்துள்ளார். 1991ல் கூட்டுத்தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, டிரிடென்ட் நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது அவருக்கு ரூ.12,368 கோடி, டிரிடென்ட் நிறுவனத்துக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
தேர்தல் பரப்புரையில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி போட்டோ அரசியலை கையில் எடுத்துள்ளன. பிரதமர் மோடி உடன் இபிஎஸ் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காட்டி ‘அதிமுக – பாஜக இடையே கள்ள உறவு’ இருப்பதாக உதயநிதி விமர்சித்தார். இதற்கு இபிஎஸ், மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, “நீங்க சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா?” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகம் & புதுச்சேரியில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. அதற்குள் மனுத் தாக்கல் செய்ய வருபவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு கதவு மூடப்படும். அதன்பின், வருவோரை அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. டெல்லியில் லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடி தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளோ, அறிவிப்புகளோ எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். டி20 பந்து வீச்சாளர்களில் முதலிடத்தில் இருக்கும் ரஷீத் கான் ஓவரில் அடுத்தடுத்து சிக்சரை பறக்கவிட்டு ஐபிஎல் கேரியரில் தனது ரன் கணக்கை தொடங்கினார். 2024 ஐபிஎல் ஏலத்தில் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. அவர் இதற்கு முன்பாக உள்ளூர் டி20 தொடரில் 9 இன்னிங்ஸ்களில் 455 ரன்கள் குவித்துள்ளார்.
சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பால் விநியோகம் தாமதம் ஆகலாம். இதனால், தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
சென்னையில் 10ஆம் வகுப்பு தமிழ்த் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 10ஆம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் 9.26 லட்சம் மாணவர்கள், பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17,663 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான SRH & MI அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் SRH 9 முறையும், MI 12 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் SRH & MI அணிகள் நேரடியாக மோதும் முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.
Sorry, no posts matched your criteria.