News April 9, 2024
தாய்க்காக சாய் பாபா கோயில் கட்டிய நடிகர் விஜய்

தாய் ஷோபனாவுக்காக நடிகர் விஜய், சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாய் பாபா கோயிலில் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் நேற்று வைரலானது. அந்தக் கோயில் சென்னை கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில், நடிகர் விஜய் கட்டியது எனத் தெரியவந்துள்ளது. ஷோபா தீவிர சாய் பாபா பக்தை என்பதால், அவரது ஆசைக்காக 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்தக் கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார்.
Similar News
News December 17, 2025
காலையில் எழுந்தவுடன் இந்த தப்பை பண்ணாதீங்க

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் 80% பேர் தினமும் காலையில், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது படுக்கையில் மொபைல் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த பழக்கம் நமக்கே தெரியாமல் நமது உடல் மற்றும் மனநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, நாளடைவில் கவனச்சிதறல் அதிகரிப்பு, மன அழுத்தம், தலைவலி, பார்வையில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படுமாம். SHARE IT
News December 17, 2025
டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான 4-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலையில் உள்ளதால், இதில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றிவிடலாம். கடந்த போட்டியிலும் பும்ரா இல்லாமலேயே இந்தியாவின் பவுலிங் மிரட்டலாக இருந்தது. அதேபோன்று சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினால் இந்தியாவை வீழ்த்துவது SA-வுக்கு பெரும் சவாலாக இருக்கும்
News December 17, 2025
வரலாற்றில் இன்று

*1398 – டெல்லியில் சுல்தான் நசீருதின் மகுமூதின் படையினர், பேரரசர் தைமூரினால்
தோற்கடிக்கப்பட்டனர்.*1973 – ரோம் நகர விமான நிலையத்தை பாலஸ்தீனர்கள் தாக்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். *2014 – அமெரிக்கா – கியூபா இடையேயான 50 ஆண்டுகளுக்கு பின் தூதரக உறவு புதுப்பிக்கப்பட்டது. *பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாள். *ஓய்வூதியர் நாள் (இந்தியா).


