News April 9, 2024
தமிழ்நாடு என்ன சரணாலயமா?

வாக்கு கேட்டு மட்டும் வந்து செல்ல தமிழ்நாடு என்ன சரணாலயமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று வாகனப் பேரணி சென்றார். அதனை சுட்டிக்காட்டிய முதல்வர், தேர்தலின்போது மட்டும் சந்திக்க தமிழக மக்கள் என்ன 2ஆம் தர குடிமக்களா? என வினவினார். மேலும், சமூக நீதி மீது அக்கறையுள்ள பிரதமரையே மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News December 14, 2025
போட்டோ இல்லை.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

இன்று நாமக்கலில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் செங்கோட்டையன் போட்டோ இடம்பெறவில்லை. கொங்கு பகுதியிலேயே அவர் போட்டோ இடம்பெறாததால், அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கெனவே <<18559707>>புஸ்ஸி ஆனந்த்<<>> – ஆதவ் அர்ஜுனா இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மா.செ.,க்களையும் ஆனந்த் தனது கண்ட்ரோலில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி செய்வாரா விஜய்?
News December 14, 2025
கலை வண்ணம் நிறைந்த PHOTOS

கலை வண்ணம் நிறைந்த வனவிலங்குகளை பார்த்திருக்கீங்களா? விலங்குகள் ஆபத்தானவை என்றாலும், அதனை படம் பிடிக்கும் விதம் நம்மை ரசிக்க வைக்கிறது. ஓவியம் போல் ரசனையுடன் எடுக்கப்பட்ட சில பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை, உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 14, 2025
சங்கிப் படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது: CM

நாட்டிலேயே பாஜகவிற்கு எதிராக Ideological fight செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரே மாநில கட்சி திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் தான் அமித்ஷா போன்றவர்களுக்கு எரிச்சலாக உள்ளது என குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த சங்கி படையையே கூட்டிக்கொண்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார். பாஜகவால் வெற்றி பெற முடியாதது தமிழகத்தில் மட்டும் தான் என்றும் கூறியுள்ளார்.


