News April 9, 2024

ஐதராபாத் 2 ரன்னில் த்ரில் வெற்றி

image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஐதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 64 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடத்துவங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. சஷாங்க் சிங் 46, அசுதோஷ் சர்மா சர்மா 33 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடிய நிலையிலும், வெற்றி இலக்கை அவர்களால் எட்ட முடியவில்லை.

Similar News

News December 12, 2025

அதிபர் டிரம்ப், PM மோடி முக்கிய ஆலோசனை

image

இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அதிபர் டிரம்ப், PM மோடி போனில் உரையாடியுள்ளனர். இதுகுறித்து X-ல் பதிவிட்டுள்ள PM மோடி, உலக அமைதி, ஸ்ரதித்தன்மைக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு, எரிசக்தி போன்ற விஷயங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 12, 2025

ராசி பலன்கள் (12.12.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News December 12, 2025

ரஜினிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கெளரவம்

image

சினிமாவில் பொன்விழா கொண்டாடியுள்ள ரஜினிகாந்துக்கு, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதனை, அவரது மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். மேலும், நாளை ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதே விழாவில் ‘பாட்ஷா’ சிறப்பு படமாக திரையிடப்படவுள்ளது. அத்துடன், ‘படையப்பா’ படம் நாளை ரீரிலீஸ் ஆகிறது. இதற்கான புரோமோஷனில் ரஜினியே களமிறங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ளது.

error: Content is protected !!