India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களிடம் காங்கேசன்துறை முகாமில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காலையில் சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஏதாவது இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்று சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.
பொங்கல் விடுமுறைக்காக சிறப்பு பஸ்கள் உள்பட 44,580 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பொங்கலை மக்கள் சாெந்த ஊரில் கொண்டாட, 10ஆம் தேதி முதல் நாளை வரை 21,904 பஸ்கள் இயக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். பொங்கல் முடிந்து பணியிடங்களுக்கு திரும்ப 15ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 22,676 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
IND vs ENG மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. நடைபெற உள்ளது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை ₹1,500ல் தொடங்கி ₹15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரின் மீலம் ஷமி அணிக்கு திரும்பியுள்ளார்.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேவஸ்தானம் சார்பில் இன்று ₹25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளது. இதற்காக தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் வசிக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளனர். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இலவச படிப்பு வழங்குவதற்கான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டையிலும், நாளை வேலூர், ராணிப்பேட்டை, தி.மலையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 14ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், 15ஆம் தேதி
ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
கிரிக்கெட்டில் Wide பாலுக்கான விதியில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக SA முன்னாள் வீரரும், ICC உறுப்பினருமான ஷான் பொல்லாக் தெரிவித்துள்ளார். பவுலிங் வீச ஓடிவரும் போது, பேட்ஸ்மேன் தனது காலை நகர்த்துவதால், பந்து வீச வேண்டிய இடம் எது என தெரியாமல் குழம்பி, பவுலர்கள் Wide வீசுவதாகவும், இனி இந்த புதிய விதியின் படி, அத்தகைய நேரங்களில் அம்பயர் தான் முடிவு எடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்கள் தொகையில் 7% பேர் சட்டவிரோதமாக போதைப் பொருளை பயன்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இது ஒரு கேன்சர் போன்று நாட்டின் தலைமுறைகளை அழித்து வருவதாகவும், இதை உடனே தடுத்தாக வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் அதிகபட்சமாக, கடந்த 2024ல் ₹16,914 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 3 மனிதர்களுக்கு மூளையில் சிப் பொறுத்தப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 2025ல் 20- 30 பேருக்கு சிப் பொறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதன் மூலம் கை, கால்களை இழந்தவர்கள் செல்போன், கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பார்வை இழந்தவர்களுக்கான சாதனத்தை உருவாக்கி, அவர்களை மீண்டும் கண் பார்வையை வழங்குவதுதான் தங்களது அடுத்த இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
தொப்பையை குறைக்க, சில எளிய பானங்களை காலையில் குடிக்க டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சை நீருடன் உங்களது நாளை தொடங்குங்கள். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பு இழப்பு செயல்முறைகளுக்கு உதவும். கேட்டசின் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்த க்ரீன் டீயும் குடிக்கலாம். ஆப்பிள் சைடர் வினிகர், பசியை கட்டுப்படுத்த உதவும். இஞ்சி டீயில் உள்ள ஜிஞ்சரால் கலவை, கொழுப்பை திறம்பட எரிக்கும்.
Sorry, no posts matched your criteria.