News January 12, 2025
IND vs ENG: டிக்கெட் புக்கிங்குக்கு ரெடியாகுங்க..

IND vs ENG மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், கொல்கத்தாவில் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. நடைபெற உள்ளது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. டிக்கெட்டின் விலை ₹1,500ல் தொடங்கி ₹15,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த தொடரின் மீலம் ஷமி அணிக்கு திரும்பியுள்ளார்.
Similar News
News November 12, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.
News November 12, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.
News November 12, 2025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


