News January 12, 2025

மக்கள் தொகையில் 7%.. அமித்ஷா அதிர்ச்சி ரிப்போர்ட்

image

இந்திய மக்கள் தொகையில் 7% பேர் சட்டவிரோதமாக போதைப் பொருளை பயன்படுத்துவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இது ஒரு கேன்சர் போன்று நாட்டின் தலைமுறைகளை அழித்து வருவதாகவும், இதை உடனே தடுத்தாக வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் அதிகபட்சமாக, கடந்த 2024ல் ₹16,914 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News November 14, 2025

Sports Roundup: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

image

*8 அணிகள் பங்கேற்கும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் நாளை தொடங்குகிறது. *குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட் 2.6 கோடிக்கு MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். *Bondi ஓபன் ஸ்குவாஷில் ரதிகா சீலன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம். *உலகக் கோப்பை செஸ் 4-வது ரவுண்டில் பிரக்ஞானந்தா தோல்வி. *ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார்.

News November 14, 2025

Cinema 360°: ‘கும்கி 2’ படத்திற்கு U சான்று

image

*’கும்கி 2′ படத்திற்கு U சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *விதார்த்தின் ‘மருதம்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு. *பிரபாஸின் Spirit ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என அறிவிப்பு. *மம்மூட்டியின் ‘களம்காவல்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!