News August 6, 2024

மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம்

image

கடலில் மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர் ராமச்சந்திரன் குடும்பத்திற்கு ₹10 லட்சம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 1ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் படகு மீது, இலங்கை கடற்படை படகு மோதியது. இதில், மலைச்சாமி என்பவர் பலியான நிலையில், ராமச்சந்திரன் மாயமானார். கடந்த 5 நாள்களாக இந்திய கடலோர காவல்படையினர் தேடி வரும் நிலையில், அவர் இன்னும் கிடைக்கவில்லை.

Similar News

News August 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 427 ▶குறள்: அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர். ▶ பொருள்: ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

News August 14, 2025

அரசு ஊழியர்கள் திமுகவை எதிர்ப்பார்கள்: அன்புமணி

image

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் திமுக அரசை எதிர்க்க வேண்டுமென்ற நிலைக்கு வந்துவிட்டதாக அன்புமணி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது வரை இல்லை என்றார். இடஒதுக்கீடு வழங்கும்படி CM ஸ்டாலினை சந்தித்து தான் முறையிட்டதாகவும், ஆனால் அதனை தர அவருக்கு மனமில்லை என்றார்.

News August 14, 2025

அர்ஜூன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம்

image

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவிகாயின் பேத்தியான சானியா சந்தோக் என்பவரை அவர் திருமணம் செய்யவுள்ளார். இருகுடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே நிச்சயதார்த்தில் பங்கேற்றுள்ளனர். மும்பையில் செல்லப் பிராணிகளுக்கான ‘மிஸ்டர் பாவ்ஸ்’ என்ற சலூனை சானியா நடத்தி வருகிறார்.

error: Content is protected !!