News September 30, 2025
Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.
Similar News
News September 30, 2025
மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

மகளை பெறாத தந்தையரை விட, மகளை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம். SHARE
News September 30, 2025
டிரம்புக்கு ₹217 கோடி நஷ்டஈடு வழங்கும் யூடியூப்

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார். அப்போது ஜோ பைடன் வெற்றியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் யூடியூப் உட்பட டிரம்பின் சோசியல் மீடியா கணக்குகள் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடுத்த நிலையில், டிரம்புக்கு ₹217 கோடி நஷ்ட ஈடு வழங்க யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளது.
News September 30, 2025
அக்.2 அன்று பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.