News September 30, 2025
Women’s WC: இந்தியா 269 ரன்கள் சேர்ப்பு

மகளிர் உலக கோப்பையில், இலங்கைக்கு இந்தியா 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இனோகா ரனவீராவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 125 ரன்னுக்குள் 6 விக்கெட்களை இழந்த நிலையில், தீப்தி சர்மா மற்றும் அமன்ஜோத் கவுர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் ஸ்நே ரானா அதிரடி காட்ட இந்தியா 47 ஓவர்களில் 269 ரன்கள் ஸ்கோர் செய்தது. முன்னதாக மழை குறுக்கீட்டால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டன.
Similar News
News December 15, 2025
இந்த எண்கள் பெண்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்!

பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பல அவசர உதவி எண்களை கொடுத்துள்ளது. பின்வரும் இந்த எண்களை அனைத்து பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் ★தேசிய பெண்கள் ஆணையம் – 181 ★பெண்கள் காவல் உதவி எண் – 1091 ★குழந்தைகள் உதவி எண் – 1098 ★அமிலத் தாக்குதல் பாதிக்கப்பட்டோருக்கான உதவி – 07533066009 ★சைபர் குற்ற உதவி எண் – 1930. அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டிய இந்த பதிவை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News December 15, 2025
அரையாண்டு விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு

டிச.23-ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு நிறைவடையும் நிலையில், பள்ளி விடுமுறை நாள்கள் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிச.24-ம் தேதி முதல் ஜன.4-ம் தேதி வரை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக, 12 நாள்கள் விடுமுறை வருவதால், டூர் செல்ல இப்போதே திட்டமிடுங்கள். சிறப்பு பஸ்கள் தொடர்பான அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.
News December 15, 2025
பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.


