News September 30, 2025
மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

மகளை பெறாத தந்தையரை விட, மகளை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம். SHARE
Similar News
News December 5, 2025
விண்வெளி to அணு உலை வரை: இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையே பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2030-க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை $100 பில்லியனாக (₹8.99 லட்சம் கோடி) உயர்த்துவது, விண்வெளி, பாதுகாப்பு, டெக்னாலஜி துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அணு உலைகளை மேம்படுத்துவது, விசா நடைமுறைகளை எளிதாக்குவது, தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
News December 5, 2025
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

டிச.9-ல் புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை, CM ரங்கசாமியிடம் இருந்து புஸ்ஸி ஆனந்த் நேரடியாக பெற்றுள்ளார். இதன்படி, உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கரூர் துயருக்கு பிறகு, விஜய் பங்கேற்கும் பொதுவெளி அரசியல் நிகழ்வு இது என்பதால், அரசியல் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
News December 5, 2025
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் HAPPY NEWS

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்கும் மாணவர்களை சிறப்பிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, பரிசு வெல்லும் மாணவர்களின் போட்டோவை பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்க போட்டோ இடம்பெற கலக்குங்க மாணவர்களே!


