News September 30, 2025
மக்களிடம் நடந்தது குறித்து கேட்க உள்ளோம்: MPக்கள் குழு

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆராய ஹேமமாலினி MP தலைமையில் ஒரு குழுவை பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் அந்த குழு இன்று தமிழகத்துக்கு வந்தடைந்துள்ளது. கரூரில் அன்று உண்மையாகவே நடந்தது என்ன என்பது குறித்தும் உள்ளூர் மக்களின் கருத்துகளை கேட்க உள்ளதாக ஹேமமாலினி தெரிவித்துள்ளார். அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 30, 2025
புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா!

நடிகர் சூர்யா ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. முதல் படமாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் ‘Suriya47’ உருவாகும் என கூறப்படுகிறது. அதே போல, பா.ரஞ்சித்- சூர்யா கூட்டணியில், ஒரு படத்தை தயாரிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கெனவே, இவர் 2D என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 30, 2025
உங்கள் உணவில் புரோட்டீன் இருக்கா?

தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். உங்கள் உணவில் புரோட்டீன் இல்லையென்றால், உடல் பலவீனம், தசை இழப்பு, சோர்வு போன்ற விளைவுகள் ஏற்படலாம். உங்கள் உணவில் புரோட்டீன் உள்ளதை உறுதி செய்யுங்கள். மேலே, புரோட்டீன் அதிகம் உள்ள சில உணவுகளை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News September 30, 2025
ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட ‘Zoho mail’

Zoho-வின் ‘Arattai’ ஆப் போலவே, ‘Zoho Mail’-ம் மக்களால் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை, 10 லட்சம் யூஸர்கள் மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 50 லட்சத்தை கடந்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டுமென PM மோடி சொன்னதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தானும் ‘ZohoMail’-க்கு மாறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.