News September 30, 2025
புது தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா!

நடிகர் சூர்யா ‘ழகரம்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. முதல் படமாக மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் ‘Suriya47’ உருவாகும் என கூறப்படுகிறது. அதே போல, பா.ரஞ்சித்- சூர்யா கூட்டணியில், ஒரு படத்தை தயாரிக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஏற்கெனவே, இவர் 2D என்டர்டெயின்மென்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 13, 2025
அண்ணா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதம்

மகாராஷ்டிராவில் லோக் ஆயுக்தா சட்டத்தை உடனே அமல்படுத்த கோரி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது சொந்த கிராமமான ரலேகான் சித்தியில் 2026 ஜனவரி 30-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நடக்கும் ஊழலை கண்டித்து கடந்த 2011-ல் டெல்லியில் இவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டதால், மத்தியில் காங்., ஆட்சி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 13, 2025
பாகிஸ்தானில் மகாபாரத, சமஸ்கிருத படிப்புகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக சமஸ்கிருத இலக்கிய படிப்பு, லாகூர் பல்கலைகழகத்தில் (LUMS) கற்பிக்கப்பட தொடங்கியுள்ளன. இதோடு சேர்த்து பகவத் கீதை, மகாபாரதத்தின் சில முக்கிய பகுதிகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ஷாகித் ரஷீத், அடுத்த 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து பகவத் கீதை, மகாபாராத அறிஞர்கள் வெளிவருவார்கள் என தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


