News October 19, 2025
MLA தேர்தலில் போட்டியிடும் வயது குறைகிறது

தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது 25-ல் இருந்து 21 ஆக குறைக்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். விரைவில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசியலில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக அவர் பேசியுள்ளார்.
Similar News
News October 20, 2025
விரைவில் வரும் சீமானின் தண்ணீர் மாநாடு

சீமான் ஏற்கெனவே ஆடு, மாடு மாநாடு மற்றும் மலைகளின் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடியில் கடல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்த சீமான், கடலில் அப்பகுதி மக்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், தஞ்சையில் நவ.15-ம் தேதி தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக அவர் அறிவித்துள்ளார். கல்லணை அருகே உள்ள பூதலூர் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 20, 2025
ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.