News October 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 20, ஐப்பசி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM▶திதி: சதுர்தசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
Similar News
News December 12, 2025
பாலிவுட் படத்திற்கு 6 நாடுகளில் தடை.. ஏன்?

ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ இந்தியாவில் கல்லா கட்டி வருகிறது. இந்த வார முடிவில் ₹200 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வளைகுடா நாடுகளில் அப்படம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கதைக்களத்தை கொண்டிருப்பதால் பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி, கத்தார், UAE நாடுகளில் அப்படம் ரிலீஸாகவில்லை. படக்குழுவின் பல்வேறு முயற்சிகளும் பலன் அளிக்காமல் போனது.
News December 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 12, 2025
IRCTC-ல் 3.02 கோடி போலி கணக்குகள்

நாடு முழுவதும் 322 ரயில்களில் ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பு செயல்பாட்டில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் போலி கணக்குகள் மூலம் தட்கல் முன்பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், IRCTC-ல் இருந்த 3.02 கோடி போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலைய கவுண்டர்களிலும் ஆதார் – OTP சரிபார்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


