News October 20, 2025
ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் டும் டும் டும்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும், நட்சத்திர வீராங்கனையாகவும் கலக்குபவர் ஸ்மிரிதி மந்தனா. அவருக்கும் இந்தூரைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். ‘ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்’ என பேட்டி ஒன்றில் பலாஷ் கூறியுள்ளார்.
Similar News
News December 17, 2025
அரையாண்டு தேர்வு விடுமுறை குறைப்பா? CLARITY

தமிழகத்தில் டிச.24 – ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழையையொட்டி, பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், அதனை ஈடு செய்யும் விதமாக விடுமுறை நாள்களை குறைத்து ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஜன.5 அன்று தான் பள்ளிகள் திறக்கப்படும் என உறுதிப்படுத்தியுள்ளது.
News December 17, 2025
பக்கா பிளான்.. திமுகவின் அடுத்த டார்கெட்

கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்துவதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், டிச.29-ல் திருப்பூர் பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் திமுக மேற்கு மண்டல மகளிர் மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். கடந்த வாரம் வட தமிழகத்தை குறிவைத்து இளைஞர் அணி மாநாட்டை திமுக நடத்தியிருந்தது.
News December 17, 2025
கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும் அரசு

பிஹாரில் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் 1.40 கோடி மகளிரின் வங்கி கணக்குகளில் தலா ₹10,000 செலுத்தப்பட்டது. அப்போது, தர்பங்கா கிராமத்தில் சில ஆண்களின் கணக்கிலும் தவறுதலாக ₹10,000 செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதை திரும்ப பெற கிராமத்துக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளனர் உள்ளூர் மக்கள். அந்த பணத்தை தீபாவளிக்கே செலவழித்துவிட்டதால் தங்களால் எப்படி தரமுடியும் என்றுள்ளனர்.


