News April 13, 2025

கனிமொழிக்கு தங்கமணி பதிலடி

image

பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்ததுதான் தமிழக அரசியலில் தற்போது பேசுபொருள். குறிப்பாக, கனிமொழி, ஸ்டாலின் என வரிசையாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி, 2026 தேர்தலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும். இபிஎஸ் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Similar News

News November 26, 2025

சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

image

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.

News November 26, 2025

ஜார்ஜ் கோட்டையே இலக்கு: தமிழிசை

image

நாளை, செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு, செங்கோட்டையன் என்ன செய்கிறார் என்பது எங்கள் இலக்கு அல்ல என்ற அவர், ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதே எங்கள் இலக்கு என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்கெனவே தவெகவில் இணையவுள்ள தகவலுக்கு KAS, OPS மறுக்காத நிலையில், தமிழிசையின் இந்த பேச்சும் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

News November 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.

error: Content is protected !!