News September 9, 2024
13 துறைகளில் தமிழ்நாடு NO 1: உதயநிதி

தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
யார் இந்த சுதர்சன் ரெட்டி?

INDIA கூட்டணியால் து.ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 79 வயதான சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவின் ரங்காரெட்டியை சேர்ந்தவர். ▶1946-ல் பிறந்த இவர், 2007-2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ▶1971-ல் உஸ்மானியா பல்கலையில் பயின்று, சட்ட ஆலோசகர் ▶1995-ல் ஆந்திர HC-ன் நிரந்தர நீதிபதியாகவும், 2005-ல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
News August 19, 2025
மீண்டும் தள்ளிப்போகும் ‘கைதி 2’?

லோகேஷ் கனகராஜை பெரிய டைரக்டராக மாற்றியது கைதி படம். கூலி படத்தை முடித்த கையுடன் அவர் ‘கைதி 2’ வேலையில் இறங்குவார் என கூறப்பட்ட நிலையில், அப்படம் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. லோகேஷ் அடுத்து ரஜினி- கமலை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இரண்டில் எந்த படத்தை லோகேஷ் முதலில் இயக்க வேண்டும்?
News August 19, 2025
குழந்தைக்கு மாத்திரை தரும் போது கவனமா இருங்க!

குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும் போது, கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிறு மாத்திரை என்றாலும் அப்படியே கொடுப்பதால் பெரும் இன்னலை சந்திக்க நேரிடலாம். திருத்தணியில் மாத்திரையை அப்படியே முழுங்கியதால், சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கி, 4 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. மாத்திரையை பொடியாக்கி, தண்ணீரில் குழைத்துதான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.