News November 19, 2024
SHOCK: தெரு விளக்கு இல்லாததால் 137 பேர் பலி
போதிய தெரு விளக்கு இல்லாததால் கடந்த 6 ஆண்டுகளில் ஒரே பகுதியில் நிகழ்ந்த 542 விபத்துகளில் 137 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் மதுரைக் கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி தாக்கல் செய்த அறிக்கையில், மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை உள்ள சாலையில் போதிய தெருவிளக்கு இல்லாததால் அதிக அளவிலான விபத்துகள் நிகழ்ந்து உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News November 19, 2024
விஜய் படத்தில் சிவராஜ்குமாரா?
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமாக கூறப்படும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அத்தகவலை அவர் மறுத்துள்ளார். இப்படத்தில் நடிப்பது சாத்தியமில்லை எனவும், வேறொரு படத்தில் கண்டிப்பாக இணைந்து பணியாற்றலாம் என ஹெச்.வினோத் கூறியதாகவும் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
CNG கேஸ் விலை ₹5 உயருகிறது; கவலையில் வாகன ஓட்டிகள்
சூழல் மாசை குறைக்கும் வகையில் ஆட்டோ, கார்கள் வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து CNG கேஸுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், விற்பனையாளர்களுக்கு CNG ஒதுக்கீடு 20% வரை குறைந்ததால், அவர்களுக்கான லாபமும் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட CNG விலை கிலோவுக்கு ₹5.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது 1 kg CNG ₹90.50க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையாக மாறும்.
News November 19, 2024
களத்தில் நிரூபிங்க சீமான்: சேகர்பாபு பதிலடி
சமத்துவம், சமாதானம் பேசுவதால் கோழைகள் அல்ல, எங்களுக்கும் வீரம் இருக்கிறது என சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சில லட்சம் பேர் கொண்ட சீமானின் கரங்களே பேனா சிலையை உடைக்கும் என்றால், ஒரு கோடி பேருக்கு மேல் உள்ள தங்கள் கரங்கள் எப்படி பதம் பார்க்கும் என்று கேள்வி எழுப்பினார். சீண்டல் என்பது வார்த்தையில் இருக்கக்கூடாது, தேர்தல் களத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.