News August 18, 2025
ED-ஆல் முடியாததால் ECI இறங்கியுள்ளது: தேஜஸ்வி

பிஹார் தேர்தலில் வாக்குகளை திருட பாஜக முயற்சிப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை, CBI, வருமான வரித்துறை தோல்வியை சந்தித்ததால் பாஜக தேர்தல் ஆணையத்தை களமிறக்கிவிட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளை திருட முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், 65 மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News December 14, 2025
போண்டி தீவிரவாத தாக்குதல்.. PM மோடி கண்டனம்

ஆஸ்திரேலியாவின், <<18561882>>போண்டி கடற்கரையில்<<>> நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தாக்குதல் சம்பவத்திற்கு X-ல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள PM மோடி, இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News December 14, 2025
3-வது டி20: இந்திய அணி பவுலிங்

தரம்சாலாவில் நடக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20-ல், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. IND அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அக்சர் படேல், பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டி20-ல் IND 101 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் SA 51 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
News December 14, 2025
கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை வழங்குக: பா.ரஞ்சித்

கேரம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கீர்த்தனாவுக்கு ஊக்கத்தொகை, அரசுப் பணி & வீடு வழங்க வேண்டும் என முதல்வரை பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு கேரம் சாம்பியன்ஷிப் வென்ற காசிமா, மித்ரா, நாகஜோதி ஆகியோருக்கு மொத்தமாக ₹2 கோடி ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கியிருந்தார். ஆனால், கீர்த்தனாவுக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


