News April 2, 2025
விபத்தில் பலியான 4 போலீஸார் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம்

சாலை விபத்துகளில் பலியான 4 போலீசாரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர் மெர்ஸி உள்ளிட்டோர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி, வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் இது பேரிழப்பு எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
இலவசமாக AI பற்றி படிக்க அரசின் புதிய திட்டம்!

ஒரு பைசா செலவில்லாமல் AI பற்றி படிக்க, Yuva AI for All திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. AI பற்றிய அடிப்படை கான்செப்ட்டுகளை 4.5 மணி நேரத்தில் நீங்கள் கற்கலாம். அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. <
News November 24, 2025
தேஜஸ் போர் விமானம் விபத்து.. HAL பங்குகளின் விலை சரிந்தது

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அதில் பட்டியலிடப்பட்டுள்ள, பொதுத்துறை நிறுவனமான HAL பங்குகளின் விலை 8.5% சரிந்து, ₹4,205-க்கு வர்த்தகமாகி வருகின்றன. துபாய் ஏர்ஷோவில் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானதால், அதை தயாரித்த HAL நிறுவனத்தின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
News November 24, 2025
நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே: ஸ்டாலின்

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என CM ஸ்டாலின் சாடியுள்ளார். சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் அரசியல் செய்தார் EPS. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்காமல், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என EPS காத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.


