News April 24, 2025
அதிக சிக்சர்கள்.. சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

அதிக சிக்சர்கள் விளாசிய MI வீரர் என்ற பொல்லார்டின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். SRH உடனான நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம், மொத்தமாக MI அணிக்காக 260 சிக்சர் அடித்துள்ள அவர், பொல்லார்டின் (258) சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 12,000 ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார்.
Similar News
News April 24, 2025
மோசமான ரெக்கார்டை படைத்த SRH!

IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.
News April 24, 2025
எப்படி இருக்கிறது சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளிவந்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு காமெடியில் மிரட்டி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த சம்மருக்கு இந்த படம் தான் பெஸ்ட் என்றும், Second Half-ல் சுந்தர்.சி-யின் Trademark காமெடி பிளாஸ்ட் என்றும் பதிவிடுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?
News April 24, 2025
11 பேரின் உயிர்களை காத்த உப்பு சாப்பாடு

கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.