News April 24, 2025
அதிக சிக்சர்கள்.. சாதனை படைத்த ரோஹித் சர்மா..!

அதிக சிக்சர்கள் விளாசிய MI வீரர் என்ற பொல்லார்டின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். SRH உடனான நேற்றைய போட்டியில் அவர் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம், மொத்தமாக MI அணிக்காக 260 சிக்சர் அடித்துள்ள அவர், பொல்லார்டின் (258) சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 12,000 ரன்களை கடந்தும் அசத்தியுள்ளார்.
Similar News
News November 7, 2025
நாளை சங்கடஹர சதுர்த்தி… நன்மைகள் என்னென்ன?

நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி தொடங்கி, மறுநாள் காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்திக்கு உகந்தது என்பதால், நாளை மாலை விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். முக்கியமாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், கடன் தொல்லை உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.
News November 7, 2025
செங்கோட்டையனுக்கு பின்னணியில் திமுக? நயினார்

செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார் என்ன பேசினார் என்ற தெளிவான தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் <<18224796>>6 பேர் சென்றதாக செங்கோட்டையன் கூறும்<<>> நிலையில் அவர்கள் யார் எனவும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
மழைக்காலத்தில் வரும் பெரும் பிரச்னை; சரி செய்ய டிப்ஸ்

மழைக்காலத்தில் ஈரத்தில் நடப்பதால் கால் விரல்களின் இடுக்குகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இது வந்தால், அரிப்பு, வலி என ஆளையே ஒருவழி செய்துவிடும். கவலையவிடுங்க. சேற்றுப்புண்ணை சீக்கிரமே சரிசெய்யலாம். இதற்கு, வேப்பிலையை அரைத்தோ (அ) வேப்ப எண்ணெயை காய்ச்சியோ புண்ணில் வைக்கலாம். இதனை தொடர்ந்து செய்துவர புண் சரியாகும், வலி நீங்கும். வலியில் இருந்து விடுதலை தரும் இத்தகவலை SHARE பண்ணுங்க.


