News August 17, 2025
உக்ரைன் போரை தொடர ஐரோப்பிய நாடுகள் முயற்சி?

உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை ஃபிரான்ஸ், ஜெர்மனி, UK உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் வரவேற்றுள்ளன. அதேவேளையில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தப்போவதில்லை எனவும், உக்ரைனை NATO அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. ஆனால், நேட்டோவில் சேர்ந்தால், தனது நாட்டின் எல்லையில் ஐரோப்பிய படைகள் நிற்கும் என்று தான் புடின் போரை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 14, 2025
அமெரிக்காவில் ஓயாத துப்பாக்கிச்சத்தம்!

கடந்த வாரம் தான் USA-வின் கென்டக்கி பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலை.,யில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில், 8 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இன்னும் பிடிபடாததால், மேலும் துப்பாக்கிச்சூடு நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
News December 14, 2025
BREAKING: விலை சரசரவென்று குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கோழிக்கறி விலை Kg-க்கு ₹5 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹114-க்கும், முட்டைக்கோழி ₹100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.20 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச கொள்முதல் விலை.
News December 14, 2025
ரஷ்யா-உக்ரைன் போரில் உச்சக்கட்ட பதற்றம்!

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசாவில், 450-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது. ஒடேசா துறைமுகம் மீது மிக சக்திவாய்ந்த கின்சல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா இந்த ஏவுகணையை பயன்படுத்துவது முதல்முறை என்பதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.


