News November 29, 2024

OPS மீது விசாரணை நடத்த தடை

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீது மறுவிசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில் OPS அதிக சொத்து சேர்த்ததாக நடைபெற்ற வழக்கை திரும்பப்பெற சிவகங்கை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு OPSக்கு சற்று ஆறுதலளித்துள்ளது.

Similar News

News December 9, 2025

ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

image

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

News December 9, 2025

காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

image

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

News December 9, 2025

திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

image

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.

error: Content is protected !!