News August 23, 2025
Hero அவதாரம் எடுத்த இயக்குநர் அபிஷன்..Back Story இதான்!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வலை
வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை
லாவகமாகத் தூக்கிய சௌந்தர்யா ரஜினி, அபிஷன் சொன்ன கதையைக் கேட்டவுடன் ‘இந்தக் கதைக்கு நீங்கதான் ஹீரோ என்றாராம். மேலும், யார்கிட்டயும் கதையை சொல்லவேண்டாம்’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சீக்ரெட்டாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 17, 2026
மாநகரில் இரவு காவல் படை அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீசாரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News January 17, 2026
சற்றுமுன்: தமிழகத்தில் கோர விபத்து

தென்காசி சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் (மினி பஸ்) கவிழ்ந்து கோர விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 குழந்தைகள் உள்பட 12 பேர் சிகிச்சைக்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஹாஸ்பிடலில் உறவினர்கள் கதறி துடித்த காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது. இதனால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
News January 17, 2026
YT-ல் குழந்தைகளின் நேரத்தை கட்டுபடுத்த வேண்டுமா?

குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நேரத்தை பெற்றோர் கட்டுப்படுத்த YouTube புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், குழந்தைகள் YouTube Shorts-க்களை பார்ப்பதற்கான நேர வரம்பை நிர்ணயிக்கவோ அல்லது முழுமையாக தடுக்கவோ முடியும். குழந்தைகள் இந்த வீடியோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்ற பெற்றோர்களின் கவலையை தொடர்ந்து YouTube ஜன.14 முதல் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.


