India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், பைக்கில் உலகம் சுற்றிவரும் தனது பயணத்தை அவர் மீண்டும் தொடங்கியுள்ளார். அஜித் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது மேலாளர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான புதிய ஜெர்சியை பெங்களூரு அணி நேற்று அறிமுகம் செய்துள்ளது. நீலம் & சிவப்பு நிறத்திலான புதிய ஜெர்சி குறித்து RCB அணியின் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியிட்ட ஜெர்சி பிரமாதமாக இருந்ததாகவும், அதை ஏன் மாற்றினார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெர்சி குறித்து உங்கள் கருத்து என்ன? அதை இங்கே கமெண்ட் செய்யுங்கள்.

முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்.19இல் தமிழகம், புதுச்சேரியில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையும், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒருசில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மீன்பிடித் தொழிலையும், முந்திரி, பலா விவசாயத்தையும் முக்கிய தொழிலாக கொண்டது கடலூர் தொகுதி. திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 18 தேர்தல்களில் காங். 7, திமுக 5 & அதிமுக 2 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வருடாந்திர பட்டியலை நேற்று ஐநா வெளியிட்டது. இதில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா 10, இங்கிலாந்து 20, அமெரிக்கா 23, ஜெர்மனி 24, சீனா 64, ரஷ்யா 70 ஆகிய இடங்களில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியாவை (126) முந்தி பாகிஸ்தான் 108ஆவது இடத்தில் உள்ளது.

திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கிறார். இதில் மூத்த நிர்வாகிகள் பலர் மீண்டும் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல் மூலம் அறியப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக 10க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பல வாரிசுகளின் பெயர்கள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இடையில் சில மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி இப்படத்தில் மூன்று நடிகர்கள் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதன்படி SJ சூர்யா, தெலுங்கு நடிகர்களான ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோரும் வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது. தமிழகத்தில் ஏறக்குறைய கூட்டணியை பாஜக நிறைவு செய்ததாக தெரிகிறது. பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, தமமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.