News March 20, 2024
கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு

கூட்டணி கட்சிகளுடன் பாஜக இன்று தொகுதி உடன்பாடு மேற்கொள்கிறது. தமிழகத்தில் ஏறக்குறைய கூட்டணியை பாஜக நிறைவு செய்ததாக தெரிகிறது. பாமக, அமமுக, தமாகா, ஓபிஎஸ் அணி, புதிய நீதி கட்சி, தமமுக, ஐஜேகே ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று உடன்பாடு எட்டப்படும் என கூறப்படுகிறது.
Similar News
News April 14, 2026
அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

இமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பிராந்தியத்தில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமை, சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?
News April 14, 2026
PM மோடி-டிரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை

மேற்காசிய போர் சூழல் தொடர்பாக PM மோடி-டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அளவில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். மேலும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக திறந்திருப்பதன் அவசியம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


