News March 20, 2024
தினம் ஒரு தொகுதி: இன்று கடலூர்

மீன்பிடித் தொழிலையும், முந்திரி, பலா விவசாயத்தையும் முக்கிய தொழிலாக கொண்டது கடலூர் தொகுதி. திட்டக்குடி (தனி), விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5 திமுக வசமுள்ளன. இதுவரை இங்கு நடந்த 18 தேர்தல்களில் காங். 7, திமுக 5 & அதிமுக 2 முறை வென்றுள்ளன. 2019 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
Similar News
News March 6, 2026
திமுக மீது அதிருப்தியில் இருக்கிறதா விசிக?

திமுக கூட்டணியில் உள்ள விசிக இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற முயற்சித்து வருகிறது. ஆனால் அது சாத்தியமில்லை என திமுக நிராகரிப்பதால், தொகுதிகளை குறைத்தால் 1 ராஜ்யசபா சீட் வேண்டும் என டீலிங்கை மாற்றிப்பார்த்ததாம். ஆனால் விசிக கேட்ட 2 டிமாண்டுகளுக்கும் திமுக பிடிகொடுக்காமல் இருப்பதால் விசிக கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News March 6, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 6, 2026
திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

தேமுதிகவுக்கு DCM பதவி வேண்டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்டதாகவும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீபகாலமாக தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்கமும் அளித்திருக்கிறார். தாங்கள் இது வேண்டும், அது வேண்டும் என்று யாரிடமும் அடம் பிடித்தது கிடையாது எனவும், மற்ற கட்சிகளை போலவே தங்களுக்கான உரிய இடத்தை தாங்கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.


