India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்திருந்தார். இதன்பின் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ‘கபாலி’ படத்திலும் தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஞ்சித் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அட்டகத்தி இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் ஆசை இருந்தால், தேர்தலில் போட்டியிடலாம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல்வாதி போல் செயல்படக் கூடாது. அப்படி ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால் தமிழிசை போல் பதவியை தூக்கி எறிந்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆளுநர் பதவியை தனது சுயநலத்துக்காக பயன்படுத்துவதை அவர் முற்றிலும் நிறுத்த வேண்டும்” என்றார்.
ஐபிஎல்லில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப், டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் தவான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் டெல்லி அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பந்த் இன்றைய போட்டியில் களமிறங்குவதால் டெல்லி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
தேமுதிக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் இராமநாதனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தஞ்சை மாநகரின் புதிய செயலாளராக செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக முறை டக் (15) அவுட்டான வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார். முதல் இடத்தில் RCB வீரர் தினேஷ் கார்த்திக் (17), இரண்டாவது இடத்தில் MI வீரர் ரோஹித் ஷர்மா (16) உள்ளனர். சுனில் நரேன், மந்தீப் சிங் ஆகியோரும் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். பிரபல இசை நிகழ்ச்சி அரங்கில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் குழந்தைகள் உள்ளிட்ட 93 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையில், 11 பேரை கைது செய்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பறக்கும் படையினர் முழுவீச்சில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ₹6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவை நகைக் கடைக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் எனக் கூறப்படும் நிலையில், ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகள், 30 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது. ரசிகர்கள் வரிசையாக வாங்கும்படி வசதி செய்யப்பட்டிருந்ததால், இணையதள பக்கங்கள் முடங்கவில்லை. இருப்பினும், விரைவாகவே விற்றுத் தீர்ந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.,யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், 10%க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்லூரிகளுக்கு நடப்பாண்டில் அனுமதி அளிக்காமல் இருக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படாமல், 5%க்கும் கீழ் மாணவர் சேர்க்கை இருந்த 11 பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. சங்ரூர் பகுதியில் கடந்த 20ஆம் தேதி விஷ சாராயம் குடித்து உடல்நிலை பாதித்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 20ஆம் தேதி 4 பேரும், 21ஆம் தேதி 4 பேரும், 22ஆம் தேதி 8 பேரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இந்நிலையில் இன்று மேலும் 5 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.