India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2012ஆம் ஆண்டு இதே நாளில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து ரோஹித் ஷர்மா மும்பை அணியை வெற்றி பெற செய்தார். ஹைதராபாத்துக்கு எதிரான இப்போட்டியில், 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கடைசி 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோஹித் ஷர்மா 6 2 6 என விளாசி அணியை வெற்றி பெற செய்தார். மேலும், மும்பை இந்தியன்ஸ் சார்பாக தன்னுடைய முதல் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

சீனாவில் பணவீக்கம் ஒரு பிரச்னையாக இல்லையென்றாலும், அந்நாட்டின் பொருளாதார மீட்சி பலவீனமாக உள்ளதாக ING வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் லின் சாங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றில் மிக மோசமான நில விலை வீழ்ச்சியின் மத்தியில் சீனா உள்ளது. வளர்ச்சியைத் தூண்டுவதற்கு தீவிரமான கொள்கைகளை அந்நாடு பின்பற்றவில்லை. அதன் பொருளாதாரக் கொள்கை முழுவதும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

திரையுலகில் புரட்சி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர் அரசியலில் புரட்சித் தலைவராக உயர மிக முக்கிய காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். ‘சின்னவரின் மனசாட்சி’ என அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரின் உதவியாளர், ரசிகர் மட்டுமல்ல ஆலோசகராகவும் இருந்துள்ளார். நடிகன் நாடாள முடியுமா? என்று எம்.ஜி.ஆரைப் பார்த்து திமுக தலைமை எள்ளி நகையாடியபோது, அவர் கட்சி தொடங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் வீரப்பன் தான் துணை நின்றார்.

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான ஆர்.எம்.வீரப்பன் (98) காலமானார். 1977ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை 5 ஆட்சிகளில் இவர் அமைச்சராக செயல்பட்டிருக்கிறார். திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து அதிமுகவை தொடங்கியபோது அக்கட்சியை கட்டமைத்தவர் ஆர்.எம்.வி. சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் இருந்தவர், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

▶விராட் கோலி – 7579
▶ஷிகர் தவான் – 6755
▶டேவிட் வார்னர் – 6555
▶ரோஹித் ஷர்மா – 6329
▶எம்.எஸ்.தோனி – 5121
▶தினேஷ் கார்த்திக் – 4606
▶ரஹானே – 4519
▶கே.எல்.ராகுல் – 4289
▶டு பிளெசிஸ் – 4242
▶சஞ்சு சாம்சன் – 4066

முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் (98) உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாள்களாக வீட்டில் இருந்த அவருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக ஜோசியரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால், பலரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர் வெயிலில் செல்லக் கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வெயிலில் வெளியே செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவு குடிநீரை பருக வேண்டும் என்றும் உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பருக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகளை பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள போலீசார், விசாரணையின்போது மருத்துவ அறிக்கைகளை எடுத்து வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

தான் ஆட்சிக்கு வந்தால் வட இந்தியர்களை திருப்பி அனுப்புவேன் என சீமான் சூளுரைத்துள்ளார். கோவையில் வடமாநிலத்தவர் வாக்கு செலுத்தி தான் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டிய அவர், வட இந்தியனுக்கு குடும்ப அட்டை கொடுத்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாக மாறும் என்றும் ஆதங்கம் தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் சும்மா இருப்பதற்கு சம்பளம் கொடுப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.