News April 9, 2024
என்ஐஏ அதிகாரிகளுக்கு காவல்துறை நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகளை பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள போலீசார், விசாரணையின்போது மருத்துவ அறிக்கைகளை எடுத்து வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 11, 2025
நாடாளுமன்றத்திற்குள் இ-சிகரெட் பிடித்தாரா MP?

லோக்சபா வளாகத்தில் TMC MP ஒருவர் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட்டை புகைத்ததாக அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இங்கு புகைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். அதற்கெல்லாம் அவையில் அனுமதியில்லை என்ற சபாநாயகர், ஆதாரங்களுடன் தனது பார்வைக்கு கொண்டுவரப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
News December 11, 2025
10-வது போதும்: மத்திய அரசில் 362 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦வயது: 18- 25 ✦கல்வித்தகுதி: 10-வது பாஸ் ✦தேர்ச்சி முறை: Tier-I, Tier-II, Document Verification ✦விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025 ✦சம்பளம்: ₹18,000 – ₹56,900 ✦முழு விவரங்களுக்கு <
News December 11, 2025
BREAKING: கூட்டணி முடிவு.. தவெக அறிவிப்பு

தவெக மா.செ.,க்கள் & மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைத்தல், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைத்தல், கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு மட்டுமே முழு அதிகாரம், ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி புதியதோர் தமிழகத்தை அமைக்க வேண்டும் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளன.


