News April 9, 2024
வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால், பலரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தோர் வெயிலில் செல்லக் கூடாது என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வெயிலில் வெளியே செல்பவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவு குடிநீரை பருக வேண்டும் என்றும் உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பருக வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
நாமக்கல் விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

நாமக்கல்லில் சிறப்பு பருவ பயிர்களான நெல்-II சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, பொது சேவை மையங்களிலோ பிரீமியத் தொகையாக, நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.567.61-ம், காப்பீடு செய்ய கடைசி தேதி நெற்பயிருக்கு டிச.16 கடைசி நாளாகும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.
News December 7, 2025
திமுக சமாதானத்தை போற்றுகிறது: சேகர்பாபு

சனாதனத்தை தாங்கள் (திமுக) அழிக்க முயலவில்லை என்று சேகர்பாபு கூறியுள்ளார். வட மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக நினைத்த மாதிரியான காரியங்கள் நடக்கலாம், ஆனால் தமிழகத்தில் அது பகல் கனவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்த சேகர்பாபு, திமுக அரசு சமாதானத்தை போற்றுகின்ற அரசு என்றும் தெரிவித்தார்.


