India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுகவினரின் போஸ்டர் பிரசாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. திருப்பூரின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி pay என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், Scan செய்யுங்கள் Scam பாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் என்ற பெயரில் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்வதற்காக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழ்நாடு வருகின்றனர். நாளை தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி நெல்லை, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். நாளை மாலை கோவையில் நடைபெறும் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். ஏப்.15இல் தமிழ்நாடு வரும் கார்கே கடலூர், புதுச்சேரியில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

உடற்பயிற்சி செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால், நீரிழிவு நோயாளிகள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை பரிசோதிப்பது அவசியமாகிறது. ஒரு வேளை சர்க்கரை அளவு குறைந்தால் வாந்தி, மயக்கம் அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். இதனால், சுயநினைவை இழக்க நேரிடலாம். இதற்கு தீர்வாக மாவுச்சத்து நிறைந்த திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

கடும் வெயிலின் காரணமாக கேரளாவில் கடந்த 10 நாள்களில் 900க்கும் மேற்பட்டோர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தினசரி 90 பேர் பாதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இங்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மக்கள் பகல் வேளையில் அத்தியாவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித், விஜய். இவர்களின் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டாலும், அவர்கள் நல்ல நண்பர்களாவே இருக்கின்றனர். இந்நிலையில், விஜய், அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த அஜித் ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கவில்லை என இயக்குநர் ஜானகி செளந்தர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பயனாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆபாச காட்சிகளை மங்கலாக்கி காட்டும் அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து பெற்றோர் அச்சம் கொள்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக இந்த அம்சம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் 19 பேர் களத்தில் போட்டியிட்டாலும், அண்ணாமலைக்காக மட்டுமே ஒட்டுமொத்த ஐ.டி விங்கும் வேலை செய்வதாக அக்கட்சிக்குள்ளேயே விவாதம் எழுந்துள்ளது. நயினார் நாகேந்திரன், தமிழிசை போன்றோர் தங்களது சொந்தச் செல்வாக்கால் லைம் லைட்டில் இருக்கிறார்கள். குமரியில் பொன்னார் தான் வேட்பாளர் என்பதை பலரும் மறந்து போய்விட்டதாக அவரது ஆதரவாளர்கள் நொந்துக் கொள்ளும் நிலையில் உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.303 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.1,43,05,91,000, ரூ. 1,21,65,09,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.93,43,000 மதிப்பில் போதைப் பொருட்கள் உட்பட ரூ.303,63,00,000 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டபின் பேசிய அவர், நாட்டிற்காக ரத்தம் சிந்த தயாராக உள்ளோம். ஆனால், மதத்தின் பெயரில் யாரையும் சித்ரவதை செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.